இன்றைய ராசி பலன் – 20-3-2021

rasi palan - 20-3-21

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயலில் சுறுசுறுப்பு இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை சமாளிப்பதற்கான சில உத்திகளைக் கையாள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவார்கள். பெண்களுக்கு குழப்பம் தீரும். ஹயக்ரீவர் வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயலுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். குருவாயூரப்பா இறை வழிபாடு செய்வது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நன்மையை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஜாமீன் கையெழுத்து போடுவதோ எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு பொறுமை தேவைப்படக்கூடிய நாள். தன்வந்திரி பகவானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சிலர் இடையூறுகள் விளைவிப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முனைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மதிப்பு உயரும். அங்காள பரமேஸ்வரியை வழிபட நல்லது நடக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய இலக்கை நோக்கி பயணம் செய்வீர்கள். நண்பர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்க பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பார்கள் பல ரீதியான விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. பெண்கள் புதிய கடன்கள் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். கணபதி வழிபாடு செய்ய நல்லது நடக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய பாதையை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் வாய்ப்புகள் உண்டு. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைத்து அதை தவிர்ப்பது உத்தமம். முருகன் வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பெண்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். குரு பகவானை வழிபடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியம் பிறக்கும். எனினும் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு போவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. சிவ வழிபாடு நன்மை தரும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்ற பாதையில் செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களின் உதவியை நாடி செல்வதற்கு முன்னர் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் நடக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமற்ற பலன்களை கொடுக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்களின் மத்தியில் உங்களுடைய மதிப்பும் உயரும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு தனலாபம் பெருகும். வேங்கடவனை வழிபட நன்மைகள் பிறக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களின் சூழ்ச்சியை முறியடித்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் தொந்தரவும் குறையும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உழைப்பாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுத்தால் முன்னேற்றம் காணலாம். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். கிருஷ்ண வழிபாடு செய்துவர நன்மை பிறக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் நல்ல விஷயங்களை அடைவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களின் உண்மையான குணநலன்களை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். சக்கரத்தாழ்வாரை வழிபட நன்மை நடக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்