இன்றைய ராசி பலன் – 20-05-2021

rasi palan - 20-5-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். பெண்களுக்கு அதிகம் சோர்வு இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. பெண்களுக்கு தேவையானது கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டதற்கு மனம் திருந்தும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இழந்த சில விஷயங்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும்பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உணவு கட்டுபாட்டில் கவனம் தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னேற கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கும் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சக பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிலிருக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியம் கவனம் தேவை.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் இடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் எதிர்மறையான பலன்களைத் தரக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலமாக விதமான பலன்களை காணலாம்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் பயன்பெறும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக தொகையை ஈடுபடுத்தும் போது எச்சரிக்கை தேவை. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்க ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.