இன்றைய ராசி பலன் – 20-5-2020

rasi palan - 20-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை புலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களை புரிந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக பணத்தை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வீண் விரையங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எதிலும் நிதானத்துடன் இருப்பது மிகவும் நல்லது. புதியவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தி செய்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி இலாபம் பெருகும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றியை தரும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சில பிரச்சினைகள் வந்து நீங்கும். பிள்ளைகள் மனம் மகிழும் சம்பவங்கள் ஏற்படும். மனைவி வழியில் அனுகூலம் உண்டாகும். தாய் தந்தையின் உடல்நிலையில் அக்கறையாக இருப்பது மிகவும் நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும். சகோதர சகோதரிகளிடம் அன்பாக இருப்பது மிகவும் நன்மை தரும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதார நிலையில் மந்தமான சூழ்நிலை இருந்தாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வாய்ப்புகள் வரும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நடைபெறும். சுபகாரிய முயற்சிகள் நன்மையை அளிக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் சக தொழிலாளர்களால் சில பிரச்சனைகள் சந்திக்க நேரலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. பண வரவு அதிகரிக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிக்கல்கள் இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்ற தரமான பலன்கள் கிடைக்கும். வெளி நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். சகோதரர்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும் எதையும் சமாளிப்பீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் செய்ய நினைப்பவர்கள் அனுகூலமான பலன்களை காணலாம். வெளியூர் தொடர்புகளால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான சூழல் உண்டாகும். எந்த செயல் செய்தாலும் அதனை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது மிகவும் நல்லது. புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக லாபம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபார ரீதியாக பெரிய தொகையை எதிர்பார்க்கலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் நன்மை உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.