இன்றைய ராசி பலன் -21-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில்  விற்பனை குறைவாகத்தான் இருக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் .

ரிஷபம்:
rishabam

இன்று மனதைரியதுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் உங்களை நம்பி சில பொறுப்புகளை தருவார்கள். அதிகாரிகளால் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்:
அனுகூலமான நாள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சிலர் விஷேஷங்களுக்குகாக உறவினர்கள் வீட்டிற்கு செல்விர்கள். சகோதரிகளால் எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அலுவலத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

கடகம் :
Kadagam
பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் வழக்கமான பணிகளை தொடர்விர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட கூடுதலான லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:
simam
குடும்பத்தாருடன் அனுசரித்து செல்லுங்கள். விரோதிகளால் பாதகம் ஏற்படக்கூடும், அதனால் கவனமாக செயல்படுங்கள். அலுவலக பணிகளை உற்சாகமா செய்வீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

கன்னி:

மகிழ்ச்சியான நாள். மாலையில் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சியில் ஈடுபடாதீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களை நம்பி விடாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

துலாம்:

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். விடாமுயற்சியால் அணைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற, கடன் வாங்க நேரிடும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.

விருச்சிகம்:

தாய்வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

தனுசு:

தன்னபிக்கையுடன் செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியில் உண்பதை தவிர்த்துவிடுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்.

மகரம்:
magaram
ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். இன்று புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலக பணிகளை உற்சாகமாக செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின் போது கவனமாக இருங்கள்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

கும்பம்:

அனுகூலமான நாள். எதிலும் புதுமையை செய்ய விரும்புவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவகத்தில் பணியாளர்களுடன் கவனமாக இருங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

மீனம்:

பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -