இன்றைய ராசிபலன் – 21 அக்டோபர் 2023

daily-rasi-palan21
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாட்களாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் வேலை இருக்கும். ரொம்பவும் முக்கியமான வேலையை உங்கள் கையில் ஒப்படைப்பார்கள். அதை கவனமாக செய்து முடிக்கவும். அலட்சியமாக இருந்து வேலையில் பிரச்சனை வந்தால் பெயர் கெட்டுப்போக வாய்ப்புகள் உள்ளது. செலவை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப மன தைரியம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் துணிச்சலோடு செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். அதே சமயம் நீங்கள் கொஞ்சம் பொறுமையோடும் இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முக்கியமான முடிவையும் எடுக்கக் கூடாது. பதறாத காரியம் சித்தராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு தேவையான சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் எதிர்காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க இன்று நீங்கள் செய்யும் காரியம் உங்களுக்கு உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு வங்கி கடன் தொடங்குவது, எல் ஐ சி போடுவது போன்ற நல்ல விஷயங்களை கூட செய்யலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. தீபாவளி பர்சேஸை நினைத்து கவலைப்பட வேண்டாம். அதற்கு தகுந்த வழியை கடவுள் உங்களுக்கு காண்பித்து கொடுக்கப் போகின்றான். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் உழைப்பு தேவைப்படும். எந்த ஒரு காரியத்தையும் சுலபமாக செய்து முடிக்க முடியாது. சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் உணர்ச்சி வச படாதீங்க. கோபப்படாதீங்க, அடம்பிடிக்காதீங்க. பொறுமையாக இருந்தால் இந்த நாளை கடந்து விடலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மேலதிகாரிகளிடம் பணிவோடு பேச வேண்டும். வியாபாரத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை அடிமைத்தனத்தோடு நடத்தக்கூடாது. அனாவசியமாக திட்டக்கூடாது. வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். மாணவர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மனது சந்தோஷப்படும்படியான தருணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நல்லது உங்கள் வீடு தேடி வரும். வரக்கூடிய வாய்ப்புகளை தவற விடாதீங்க. வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமைய விட்டாலும், சில முயற்சிகள் எடுப்பதில் தவறு கிடையாது. வாழ்க்கை துணை உங்களுடைய முயற்சிகளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான நாளாக இருக்கும். உங்களுடைய புத்தி கூர்மை வெளிப்படும். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக சமாளித்து விடுவீர்கள். நிறைய பாராட்டுகள் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நஷ்டமாக கூடிய விஷயங்களை கூட ஏதாவது ஒன்று செய்து லாபமாக மாற்றி விடுவீர்கள். உங்களுடைய சமோஜித புத்தி உங்களுக்கு இன்று கை கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். முக்கியமான வேலைகளை நாளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகப் பணியில் உங்களுக்கு சாதகமாக யாருமே பேச மாட்டாங்க. மேலதிகாரிகளிடம் திட்டுவாங்க கூட வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் சகித்துக் கொள்ளுங்கள். முன்கோபம் வேண்டாம். வேலையை தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடப்பது போலவே இருந்தாலும் கூடவே சின்ன சின்ன சிக்கல்கள் வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கூடவே இருந்து குழிப்ரிக்க நாலு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே ரொம்பவும், நண்பர்கள் என்று உங்களுடைய ரகசியங்களை எல்லாம் அவர்களிடம் சொல்லாதீங்க. வீட்டிற்கு மூன்றாவது நபர்களை அழைத்துச் செல்ல வேண்டாம். கொஞ்சம் உஷாரா இருந்தா இந்த நாளை ஜெயிச்சிடலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியான நாளாக இருக்கும். நிறைய வேலையே இருந்தாலும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். எல்லா வேலையையும் சரிவர முடித்து விட்டு மன நிறைவோடு நல்லா தூங்குவீங்க. நல்லா சாப்பிடுவீங்க. செலவுக்கு தேவையான பணம் கையில் இருக்கும். நன்மை தரக்கூடிய இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்லலாம்.

- Advertisement -