இன்றைய ராசி பலன் – 22-08-2020

rasi palan - 22-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல சுப நிகழ்வுகள் தரக்கூடிய நாளாக அமையும். புது நட்புக்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். குரு பகவானுக்கு கடலை மாலை சாற்றி வர மேன்மை உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். வயிற்றுப் மற்றும் வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் புரிவோருக்கு சற்று மந்தமாக காணப்படும். சூரியன் பகவானை வழிபட்டு வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலமான நாளாக அமையும். குடும்பத்தினருடன் நல்ல ஒற்றுமை கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. சூரியன் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது புது முடிவுகள் எடுக்கவும் அதில் பயனடையவும் வாய்ப்புகள் உள்ளன. நெடு நாட்கள் நீடித்த கடன் தொல்லை நீங்கும். பழைய உறவுகள் திரும்பி வரும். மற்றவர்களிடம் அளவாக பேசுவது நல்லது. காலபைரவரை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் அடையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். புது உறவுகள் நட்புகள் கிடைக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. துர்க்கை அம்மனை வழிபட்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். புது முயற்சிகளை மேற்கொள்வது நல்ல முடிவை கொடுக்கும். உடன் இருப்பவரோடு வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விநாயகருக்கு எருக்கம் மாலை சாற்றி வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் மிகுந்த நாளாக காணப்படும். தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும். நண்பர்களிடம் பணம் விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது நல்லது. வராகி வழிபாடு சங்கடங்களை தீர்க்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான நாளாக காணப்படும். புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வீண் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினருடன் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். முருகப் பெருமானை வழிபட்டு வர பணவரவு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதார சூழ்நிலை சம்பந்தமாக காணப்படும். சொத்துப் பிரச்சனைகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் முக்கியம். இதிலும் நல்ல நிதானத்துடன் செயல்படுவது வேண்டிய கைகொடுக்கும். நரசிம்மரை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமையும். புதிய வீடு, வாகனம், சொத்து வாங்கும் சூழல் உண்டாகும். சிறு சிறு மனக்குழப்பங்கள் வந்து போகலாம். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட்டு வர வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பயனைத் தரக்கூடியதாக அமையும். புதிய முயற்சிகளிலும் ஆதாயம் அடைவீர்கள். உடல் நலத்தில் அக்கறை தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் சாதகமாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். ராகு-கேது வழிபாடு மேற்கொண்டால் துஷ்ட சித்திகள் விலகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பு மிக்க நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -