இன்றைய ராசி பலன் – 22-4-2020

rasi palan - 22-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமாக இருக்கும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மாற்றத்தைப் பற்றி சிந்திப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான நல்ல செய்திகள் தேடிவரும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி மேம்படும். உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது நடக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது அலைச்சல்கள் உண்டாகக் கூடும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிணைப்புகள் வந்து செல்லும் வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக அமைகிறது. வயதானவர்களுக்கு சற்று உடல் நிலை பாதிப்பு ஏற்படக்கூடும். தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாகவே இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக அமைய போகிறது. தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் போர்க்களத்தில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கவனம் தேவை. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. புதுக்கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்கும். வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. பெண்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயங்களுக்கு கூடுதல் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்து வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகமாக உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும். முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும் வாய்ப்புகள் உண்டு. மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக தான் இருக்கும். எதையும் செய்யும் பொழுது நிதானமாக செய்ய வேண்டும. குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவி கைக்கு வந்து சேரும். பண வரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மாணவர்களின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சற்று கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை தள்ளி வைப்பது மிகவும் நல்லது. சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடிவடையும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் நல்ல செய்திகள் தேடிவரும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். உடல்நலம் நன்றாக இருந்து வரும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஒருசிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் தன வரவு உண்டாகும். புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள் உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் செய்வீர்கள்.சொத்து சம்பந்தமான செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். எடுக்கின்ற அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். கடன் பிரச்சனைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தி னாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தால் வெற்றிகரமாக சாதிப்பீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பெரியோர்களே அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.