இன்றைய ராசி பலன் – 21-10-2019

Rasi Palan

மேஷம்:
Meshamஇன்று நீங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் . சிலருக்கு தேவை அற்ற அலைச்சல் இருக்கும். நிதானமாக இருந்தால் இந்த நாள் உங்களுக்கு பிரதானமாக இருக்கும். இறை வழிபாடு வெற்றியை தரும்.

ரிஷபம்:
Rishabamஇன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்களால் உரிய நேரத்தில் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையான பண வரவு இருக்கும். வேலை காரணமாக வெளியூர் செல்பரவர்களுக்கு காரியம் வெற்றியடையும்.

மிதுனம்:
Midhunamஉங்கள் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பண வரவு அதிகரிக்கும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் அனுகூலமாக இருக்கும்.

கடகம்:
kadagamதொழில் ரீதியாக உங்களுக்கு இன்று சிறப்பான நாள். புதிய முறைச்சியில் ஈடுபட்டால் வெற்றி தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்:
Simmamஇன்று சுப செலவுகள் உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வர். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருது வேறுபாடுகள் அகலும். பண வரவு அதிகரிக்கும்.

கன்னி:
Kanniபுதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் வெற்றி தரும். நல்ல செய்தி வந்தடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

துலாம்:
Thulamஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:
Viruchigamஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்க அனுகூலமான நாள் இது. வீட்டிற்கு சுப செய்திகள் வந்தடையும்.

தனுசு:
Dhanusuசக ஊழியர்களோடு நட்பு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தேவைகள் பூர்த்தியடையும். சுப செய்திகள் வந்தடையும். பண பரிவர்த்தனை லாபகரமாக இருக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.

மகரம்:
Magaramவியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் இருக்கும்.

கும்பம்:
Kumbamபண வரவை அதிகரிக்க புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். செய்யும் வேலையில் முழுமையான ஈடுபாடு இருக்கும்.

மீனம்:
Meenamஉறவினர்களால் செலவு அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு அனுசரணையாக செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிதாக நஷ்டமோ லாபமோ இருக்காது. வாக்குறுதி தருவதில் கவனம் தேவை.

இந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் அறிந்துகொண்டு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.