இன்றைய ராசிபலன் – 23 அக்டோபர் 2023

daily-rasi-palan23
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சொந்த பந்தம் தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று பணத்தை கொடுத்தால் ஏமாற வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக ஆயுத பூஜையை வழிபாடு செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் சிறப்பான பூஜை முறைகள் நடைபெறும். தொழிலாளர்கள் மனதிருப்தி அடைவார்கள். சரஸ்வதியின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சாமி கும்பிட்டு மற்ற வேலைகளை முடிப்பதற்குள் அசந்து போவார்கள். வண்டி வாகனம் வைத்திருப்பவர்கள் அவைகளுக்கெல்லாம் பூஜை போடுவதில் ஆர்வம் அதிகம் காட்டுவீர்கள். இந்த நாள் இறுதியில் உடல் ஆசதி மட்டும் இருக்கும். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று புது அனுபவம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மையை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வீட்டில் மனநிறைவாக சரஸ்வதி பூஜையை வழிபாடு செய்வீர்கள். உங்களுடைய பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். இல்லத்தரசிகளுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் மறையும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் இறைவழிபாடு செய்து சரஸ்வதியின் அனுக்கிரகத்தை முழுமையாக பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். யாராவது ஒருவர் உங்களை கோபப்படுத்தவே அதிகமாக பேசுவார்கள். கவலைப்படாதீங்க, அடுத்தவர்களை பற்றி யோசிக்காதீங்க. உங்கள் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். சிக்கல்களை உண்டாக்குபவர்களை கணக்கில் வைத்துக் கொள்ளாதீர்கள். நிம்மதியாக இன்றைக்கு உண்டான பண்டிகை நாள் வேலையை கவனியுங்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்ற சுறுசுறுப்பாக செயல்பட்டு பூஜைக்கு உண்டான வேலைகளை செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனத்தை வைத்திருப்பவர்கள் சுத்தம் செய்யும் வேலைகளை அழகாக முடித்துவிட்டு அலங்காரம் செய்துவிட்டு, மாலை நேரத்தில் மன நிறைவோடு பூஜை செய்வீர்கள். வீட்டில் இல்லத்தரசிகளுக்கு பூஜை செய்த திருப்தி ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப உற்சாகமாக தொடங்கினாலும் போகப் போக சோர்வடைய வாய்ப்புகள் உள்ளது. வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்யக்கூடிய வேளையில் ஆர்வம் காட்டுவீர்கள். இருந்தபோதிலும் வீட்டில் சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எந்த அலைச்சலும் இருக்காது. சந்தோஷமாக வீட்டில் பூஜை வேலையை கவனிப்பீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இன்று மாலை நேரத்தில், கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருங்க. முன்பின் தெரியாதவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம். மனைவி சொல் பேச்சு கேட்டு நடப்பது நல்லது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று நன்மை நடக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். சொந்த ஊரில் இல்லையே என்ற ஏக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய காண்ட்ராக்ட்கள் கையொப்பம் ஆகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்து மன நிறைவை பெறுவீர்கள். உங்களுடைய உறவினர்கள் வீட்டிற்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆண் பிள்ளைகளால் மனம் சந்தோஷம் அடையும்.

- Advertisement -