இன்றைய ராசி பலன் – 23-11-2020

rasi palan - 23-11-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவரையும் எதிர்க்கும் துணிவு கொண்ட உங்கள் ராசிக்கு நல்ல நிகழ்வுகள் தான் நடைபெற இருக்கிறது. நீதி, நேர்மை, நியாயத்திற்கு எப்போதுமே துணை நிற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அன்பு குறையாமல் இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் குணாதிசயங்களை எளிதாக எடைபோடும் உங்கள் ராசிக்கு அமைதியாக இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள சில புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்பு உங்கள் ராசிக்கு நல்ல நிகழ்வுகள் நடைபெறும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். தொழில் சார்ந்த விஷயத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய உங்கள் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் சற்று எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் மனதை புண்படுத்த நினைக்காத உங்களுடைய ராசிக்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் சாதுரியமான பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் உங்கள் ராசிக்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். அரசு ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேடிக்கையான பேச்சாற்றலால் உங்களை சுற்றியிருப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் உங்கள் ராசிக்கு சாதகமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார பிரச்சனைகளை திறம்பட சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவான சிந்தனையால் எதையும் தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடிய உங்கள் ராசிக்கு குழப்பமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு முடிவையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து விட்டு எடுப்பது மிகவும் உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமயோஜித புத்தியால் வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் உங்கள் ராசிக்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் புதிய நுணுக்கங்களை கையாளுவீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் இருவேறு கோணங்களில் யோசிக்கும் உங்களுடைய ராசிக்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கஷ்டகாலம் மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கடன் தொகைகள் குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு பணிச்சுமையை உண்டாக்கும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டு.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லோரையும் எளிதில் நம்பிவிடும் உங்களுடைய ராசிக்கு நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டால் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது அனுகூலமான பலனை கொடுக்கும். சொத்துக்கள் வாங்கும் மற்றும் நிற்கும் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியான எதிர்பார்ப்பு சாதகப் பலனை கொடுக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழந்தைகளிடம் கூட மரியாதையாக நடந்து கொள்ளும் உங்களுடைய ராசிக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய இரக்க குணத்தால் நீங்கள் செய்த புண்ணியங்கள் வரமாக வந்து சேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட சாத்தியக்கூறு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.