இன்றைய ராசி பலன் – 23-12-2019

rasi palan - 23-12-2019
- Advertisement -

மேஷம்:
இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான ஒரு நாளாக அமையும். திடீர் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் உத்தியோகத்தில் புதிய மாற்றங்களை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. உங்களின் விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நன்னாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

ரிஷபம்:
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு முடிவையும் நீங்களே எடுப்பது நல்லது. யாரையும் ஆலோசிக்க தேவையில்லை.

- Advertisement -

மிதுனம்:
இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க மாறாக அது வேறொன்றாக நடக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாக வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் தனவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. எதையும் திட்டமிட்டு செயலாற்றுவது நலம் தரும். துர்க்கை வழிபாடு சிறப்பான நாளாக மாற்றும்.

கடகம்:
இன்றைய தினம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக அமையும். உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அயராமல் உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் தற்போது சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்களின் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
இன்றைய தினம் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக அமையும். நீங்கள் பொறுமையை இழக்க நேரிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்-மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்றைய தினம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களை சுற்றியுள்ளவர்களிடமிருந்து கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களே உங்களின் எதிராக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எதையும் பொறுமையுடன் செயலாற்றுவது நல்லது. வேலைபளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள்.

- Advertisement -

துலாம்:
இன்று நீங்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலை ஏற்படலாம். எந்த ஒரு முடிவையும் இன்றைய தினத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் பெற்றோர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உங்களுடைய உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும்.

விருச்சிகம்:
இன்றைய தினம் உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் நன்மதிப்பை பெறும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களைப்பற்றிய மதிப்பீடு மற்றவர்களிடம் உயர்வாக இருக்கும். உங்களின் கவனம் முழுவதும் உங்களின் உத்தியோகத்தில் ஆழ்ந்திருக்கும் எனினும் சுற்றியுள்ளவர்களையும் கவனித்துக் கொள்வது நல்லது. தன வரவு திருப்திகரமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

தனுசு:
உங்களின் நேர்மறையான அணுகுமுறை பல விஷயங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். உங்களை நீங்களே புரிந்து கொள்ளும் நாளாக இருக்கும். உங்களின் சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். உறவுகளின் மதிப்பை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். தம்பதியரிடையே அன்னியோன்யம் நிலைத்திருக்கும்.

மகரம்:
இன்றைய தினம் நீங்கள் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். வெளியிடங்களுக்கு சென்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைத்து கொள்வீர்கள். உங்களின் கனிவான உபசரிப்பால் சிலர் திருப்தி அடைவார்கள். எடுக்கும் எந்த ஒரு முடிவும் வெற்றிகரமாக உங்களுக்கு சாதகமாக அமையும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:
இன்றைய தினம் உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உங்களின் அலட்சியம் உங்களுக்கு சிக்கல்களை உருவாக்கி தரும் எனவே மிகவும் கவனத்துடன் செயலாற்றுவது முக்கியம். உங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாளாக இருக்கும்.

மீனம்:
இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக அமையும். நீங்கள் எவ்வளவுதான் விட்டுக்கொடுத்து சென்றாலும் உங்களை சிலர் புரிந்து கொள்ளாமல் போவார்கள். உங்களின் நேர்மறையான எண்ணமே உங்களின் மன மகிழ்ச்சிக்காக காரணமாக அமையும். குழப்பத்தை விடுத்து சரியான பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -