இன்றைய ராசி பலன் – 23-05-2021

rasi palan - 23-5-21

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் நல்ல செய்திகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் திடீரென எதிர்பாராத நபர்களின் வருகையால் குதூகலம் காணப்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பநிலை நீங்கும். தொழிலாளர்கள் ஒற்றுமை சிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் தெளிவாக முடிவெடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்களை மதிப்புடன் நடத்துவார்கள். வெளியிட பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கன்னி:
Kanni Rasi

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு .சக பணியாளர்களினால் தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. பெண்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னேற்றம் உண்டு. நினைத்த காரியம் நிறைவேறும். இறைவழிபாடு மன அமைதியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வலுவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு சூடு பிடிக்கத் துவங்கும். உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்பட்டாலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நேரம் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும். இதுவரை உங்கள் மனதில் இருந்து வந்த குழப்ப நிலை குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் இதனால் டென்ஷன் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் தேவையற்ற சண்டை சச்சரவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் பணவரவு சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் மதிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த விஷயங்கள் நடைபெறும். தொட்டது துலங்க கூடிய அற்புதமான நாளாக பெண்களுக்கு இன்றைய நாள் அமையும். ஆரோக்கியம் சீராக இருக்கும் எனினும் உணவு கட்டுபாட்டில் எச்சரிக்கை தேவை.