Rasi palan : இன்றைய ராசி பலன் – 24-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் செல்ல நேரிடும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:
midhunam

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:
simmam

தேவையான அளவுக்குப் பணம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்கினால் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

துலாம்:
Thulam Rasi

புதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்:
virichigam

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி அடையும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் பணவரவு உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

இன்று குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். பொறுப்பு அதிகரிப்பால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்குமேல் மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவம் ஒன்று நிகழும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

மீனம்:
meenam

மீன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -