இன்றைய ராசி பலன் – 24-08-2020

rasi palan - 24-8-2020
- Advertisement -

மேஷம

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது முயற்சிக்கு வெற்றி கொடுக்கும் நாளாக அமையும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்ல முடிவை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை அவசியம். வயிற்று உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. விநாயகரை வழிபட்டு வர நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமையும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர். கடன் கொடுக்கல் வாங்கல் இருக்கும். சகோதரர் வழியில் செலவுகள் ஏற்படும். வாகன ஓட்டிகள் கவனம் தேவை. ராகு கேதுவை வழிபட்டு வர சுபம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமாக காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவும். பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல்நலத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மை தரும். சித்தி முத்தி விநாயகரை வழிபட்டு வர வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல விஷயங்களை செய்யக்கூடிய நாளாக அமையும். தொட்டது துலங்கக் கூடிய ஒன்றாக இருக்கும். பணச் செலவில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது மனக் கசப்பை தவிர்க்கும். மகாலட்சுமியை வழிபட்டு வர பணவரவு அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி நிறைந்து இருக்கும். பொருளாதாரம் சூழ்நிலை மந்தமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. தொழில் புரிவோருக்கு பணவரவு கிடைக்கும். வராகி அம்மனை வழிபட்டு வர அமைதி மேலோங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வரும். செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சுயதொழில் செய்வோருக்கு விரயம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெருமாளை வணங்கி வர கவலைகள் அகலும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதானமாக செயல்படுவது வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்கள் வழியே நற்செய்திகள் வரும். குடும்பத்தினரோடு அனுசரித்துப் போவது மன அமைதியை ஏற்படுத்தும். தொழில் முனைவோருக்கு இது ஒரு நல்ல நாளாக அமையும். சிவனை வணங்கி வர நல்ல முன்னேற்றம் காண்பீர்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதால் உடல் அலைச்சல் ஏற்படும். உடன் பணியாற்றுபவர்கள் இடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். துர்கை அம்மனை வழிபட்டு வர மன சஞ்சலங்கள் அகலும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நற்செய்திகள் வரக்கூடிய நாளாக அமையும். தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளிடையே அக்கறை காட்டுவது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றிக்கு கைகொடுக்கும். சனி பகவானை வழிபட்டு வர நல்ல பலனை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக அமையும். தொழில் புரிவோருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியே ஆதாயம் காண்பீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வாகன ஓட்டிகள் கவனமுடன் இருப்பது நல்லது. அரசமரப் பிள்ளையாரை வழிபட்டு வர மகிழ்ச்சி பொங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன சஞ்சலங்கள் ஏற்படக்கூடிய நாளாக அமையும். புது நண்பர்கள் உருவாக வாய்ப்பு உண்டு. தொழில் புரியும் இடத்தில் நிதானத்துடன் இருப்பது நன்மை தரும். பிள்ளைகள் உடல் நலத்தில் கவனம் தேவை. நரசிம்மனை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது விஷயங்களை செய்யக் கூடிய நல்ல நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முருகப் பெருமானை வழிபட்டு வர மனக்குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -