இன்றைய ராசிபலன் – 24 அக்டோபர் 2023

daily-rasi-palan24
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் துணிச்சலோடு எதிர்கொண்டு ஜெயிப்பீர்கள். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். மன உறுதி அதிகரிக்கும். இன்று நீங்கள் புதுசாக தொடங்கும் எந்த விஷயமும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். விஜயதசமிக்கு உங்களால் முடிந்த வரை யாராவது ஒரு குழந்தைக்கு படிப்பு ஆரம்பித்து வைக்க உதவி செய்யலாம். ஏழை குழந்தைகளாக பார்த்து உதவி செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான கூடிய நாளாக இருக்கும். தன்னிச்சையாக செயல்பட்டு துணிச்சலோடு எல்லா வேலைகளையும் முடிப்பீர்கள். யாரைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். இன்று விஜயதசமி அல்லவா. உங்களால் முடிந்தவரை இரண்டு பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கி பரிசளிப்பது நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பலான நாளாக இருக்கும். நேற்றைய வேலை இன்று உடல் சோர்வை கொடுத்திருக்கும். கவலைப்படாதீங்க. இன்று மாலை எல்லாம் சரியாகிவிடும். விஜயதசமி இன்று நீங்கள் தொடங்கக்கூடிய நல்ல காரியங்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். படிப்பதற்கு வசதி இல்லாத குழந்தைகளுக்கு இன்று உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். விஜயதசமி அன்று நீங்கள் தொடங்கக்கூடிய நல்ல காரியம் எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து நிறைய பாராட்டுகள் வரும். யாராவது ஏழை படிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான கல்வி உதவியை இன்று நீங்கள் செய்யலாம்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசி காரர்களுக்கு இன்றைய நாள் பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். புதுசாக நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும். இன்று படிக்கும் பிள்ளைகளுக்கு நீங்கள் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கி தானம் கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. உள்ளே காம்பஸ் ஸ்கேல் எல்லாம் வைத்திருக்கும் அல்லவா அப்படி ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான பலனை கொடுக்கும். இருந்தாலும் விஜயதசமி என்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். கொஞ்சம் மன கசப்பான சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. பிரச்சனை இல்லை. எல்லாம் சுமூகமாக முடியும். இன்று ஐந்து குழந்தைகளுக்கு உங்கள் கையால் ஸ்லைட் (கரும்பலகை) வாங்கிக் கொடுத்தால் நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாள். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. இன்று படிக்கும் பிள்ளைகளுக்கு யாராவது ஒருவருக்கு சீருடை வாங்கி கொடுத்தாலும் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். உங்கள் போக்கில் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. கோவில் சென்று குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். இன்ற விஜயதசமி என்பதால் கோவிலுக்கு வரும் பெண் பிள்ளைகளுக்கு உங்கள் கையாகளால் பேனா அல்லது பென்சில் வாங்கி தானம் கொடுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பிள்ளைகளால் மனது சந்தோஷப்படும். இன்று மாலை உங்கள் கைகளால் ஆண் பிள்ளைகளுக்கு பேனா பென்சில் வாங்கிக் கொடுப்பது நன்மையை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். உங்கள் கையால் இன்று கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கி பரிசளிப்பது நல்லது. ஆறாம் வகுப்புக்கு மேலே படிப்பார்கள் அல்லவா அவர்களுக்கு கல்விக்காக உதவி செய்யுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ளுங்கள். யாராவது உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி நீங்கள் போடும் புதிய திட்டங்கள் இன்று வெற்றியை கொடுக்கும். புதுசாக படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு உங்கள் கையால் ஸ்லைட் வாங்கிக் கொடுக்கவும்.

மீனம்

மீனராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரும் நாளாக அமையும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடம்பில் இருந்த சோர்வு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். இன்று விஜயதசமி என்பதால் நீங்கள் உங்களால் இயன்ற உதவியை படிக்கும் குழந்தைகளுக்கு செய்யலாம்.

- Advertisement -