- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 24 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 24 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பல நாள் செய்ய முடியாத வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். இளைஞர்களுக்கு இன்று எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். காதல் கைகூடும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். மனக்கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அனாவசியமாக எந்த சண்டைக்கும் போக வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். தேவையான அளவு ஓய்வு எடுப்பது முக்கியம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உற்சாகம் தேவைப்படும். உடல் சோர்வு வேலையில் பின்னடைவை ஏற்படுத்தலாம். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கடமையில் தவறாமல் நடந்து கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்க கூடாது. அனுபவ சாலிகளின் பேச்சை தட்டிக் கழிக்கக் கூடாது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக வெளிப்படும். திறமையாக செயல்படுவீர்கள். பல பேரால் செய்ய முடியாத வேலையை, நீங்கள் இன்று செய்து விடுவீர்கள். அதிலும் ஸ்மார்ட் வொர்க், உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வருமானம் பெருகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சோம்பேறித்தனம் விடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். பகை விலகும். நீண்ட நாள் மனக்கசப்பு சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். பெருமாள் வழிபாடு செய்வது மேலும் நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை அதிகரிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களே, உங்களுக்கு நல்லது நினைக்க மாட்டாங்க. குடும்ப விஷயங்களை அனாவசியமாக எல்லோரிடமும் பேசாதீங்க. தேவையில்லாத நண்பர்களிடம் அதிக சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டாம். கவனத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். கடமைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போதும் கவனம் இருக்கட்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தெளிவு பிறக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். நேரத்தை வீணடிக்க மாட்டீங்க. கடமையில் கவனத்தோடு செயல்படுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் அதிகரிக்கும் நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திப்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சில குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம்.

சற்று முன்