இன்றைய ராசி பலன் – 24-11-2020

rasi palan - 24-11-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல விஷயங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். மன உளைச்சல் நீங்க தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பிரச்சனை பெரிதாக இருக்காது. பிள்ளைகள் உங்களுடைய பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான மனநிலை இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாள்

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்க நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றை சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பாக இருப்பதால் நல்லவைகள் நடக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளை காலதாமதம் ஆனாலும் வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கக் கூடிய நேர்மறை எண்ணங்கள் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய விஷயங்களில் அனுகூல பலன்கள் உண்டு. பொருளாதாரம் சீராக இருக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அடிக்கடியும் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தொழில் ரீதியான பயணங்கள் அனுகூலமான பலன்களை கொடுக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உள்ளம் மகிழும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான அமைப்பாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் புரிபவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை யோசிப்பது நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதையும் நிதானத்துடன் கையாள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் இருக்கும் மூத்த நண்பர் களை அனுசரித்து செல்வது நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய துன்பங்கள் தீர கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்பழி நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருட் தேக்கம் ஏற்பட இருப்பதால் எச்சரிக்கை தேவை. பெண்கள் இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். நினைத்ததெல்லாம் நடக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயலாற்ற வேண்டியது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக முடிப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களை எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன் இருக்கும். முன் கோபத்தை தவிர்த்து அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கத் துவங்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.