இன்றைய ராசி பலன் – 25-1-2020

rasi palan - 25-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி கிட்டும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி வரும். வாகன வகையில் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. பிள்ளைகளால் உள்ளம் மகிழும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடு செல்ல காத்துக் கொண்டு இருப்போர்க்கு எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தன வரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் முயற்சிக்கு உரிய பலன் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் சிறப்பான யோகத்தை பெற முடியும். உயர்கல்வி பயில்வோருக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. தொழில் துறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

கடகம்:
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடல் வெளிநாட்டில் இருப்பவருக்கு உண்டாகக்கூடும். கடன் பிரச்சினைகள் மேலோங்கி காணப்பட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல சூழ்நிலை நிலவுகின்றன. சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன நிம்மதி பெறலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு பெருகும். வழக்குகள் சாதகமாக முடியும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் கிட்டும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். ஒரு சிலர் எதிர்பாராத தன வரவால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சற்று சோர்வுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றமான நாளாக இருக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். மேற்கல்வி பயில்வோருக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் கடின முயற்சியால் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சினைகளால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். உயர்கல்வி பயில்வோருக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. கல்வியில் மாணவர்களின் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். பெண்களுக்கும் வாகன வகையில் ஆதாயம் உண்டு. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி பயில்பவர்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். தொலைதூர பயணங்கள் ஒரு சிலருக்கு உண்டாகக்கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சகோதர, சகோதரிகளின் வழியே பிரச்சனைகள் வந்து மறையும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுய தொழில் புரிவோர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொலைதூரப் பயணங்கள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். மனதிற்குப் பிடித்தவர்களால் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு மறையும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைகளை திறம்பட சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிட்டும். ஒரு சிலருக்கு எதிர்பாராத தனவரவு உண்டாகி குதூகலப்படுத்தும். மாணவர்களின் கல்வி விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உயர்கல்வி பயில்வோருக்கு நல்ல தகவல்கள் கிட்டும். வழக்குகள் போன்ற விஷயங்களில் வெற்றி கிட்டும். அரசு வழி அனுகூலம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி இருப்போர்க்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கூட்டுத்தொழில் முயற்சிகள் மேற்கொள்வோர்க்கு லாபகரமான நாளாக இருக்கும். பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

- Advertisement -