இன்றைய ராசிபலன் – 25 அக்டோபர் 2023

daily-rasi-palan25
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த பந்தங்களுக்கு இடையே இருந்து வந்த பகை விலகும். வீட்டில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மனநிறைவான இந்த நாளில் சொல்வதற்கு பெருசாக பிரச்சினைகள் எதுவும் இருக்காது. வியாபாரம் தொழில் அலுவலகப் பணி எல்லாம் நல்லபடியாக செல்லும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதி அற்புதம் வாய்ந்த நாளாக இருக்கப் போகின்றது. வெற்றிகள் வந்து குவிய போகின்றது. எதிர்பார்க்காத நல்லது நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் அடம் பிடித்து செய்யாதீர்கள். அது போன போக்கில் விட்டுவிடுங்கள். சொந்த தொழிலில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். அகல கால் வைக்க வேண்டாம். முன்பின் தெரியாதவர்கள் யோசனையின் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சின்ன பின்னடைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில இடங்களில் சொன்ன வார்த்தை காப்பாற்ற முடியாமல் கெட்ட பேர் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மண உலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் உடல் அசதி ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி நிதி நிலவரம் மேலோங்கி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தீபாவளி செலவுக்கு கைக்கு காசு வந்து சேரும். வாரா கடன் வசூல் ஆகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது. கஷ்டமான வேலைகளை கூட ரொம்ப சுலபமா முடிச்சிடுவீங்க நல்ல பெயர் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆச்சரியங்கள் மறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத சில நல்லதும் நடக்கும். எதிர்பாராத சில தோல்விகளும் கிடைக்கும். எல்லாம் அனுபவம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனைவி சொல்வதை காது கொடுத்து கேட்டால் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளது. சண்டை சச்சரவு தேடி வரும். கைகலப்பு வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். யாருக்கும் முன் நின்று பஞ்சாயத்து செஞ்சு வைக்காதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கணும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஜாக்கிரதியாக இருக்க வேண்டிய நாள். நீங்கள் என்ன பேசினாலும் அடுத்தவர்கள் உங்கள் மீது பழி போடுவார்கள். மௌன விரதம் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. குறிப்பாக குடும்ப சண்டையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். இல்லை என்றால் உறவுகள் பிரிந்து விடும். வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் போட்டுக்கோங்க. அரசு விதிகளை மீறாதீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வெற்றிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் லாபத்தை கொடுக்கும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாள் இது. கொஞ்சம் வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். பண பற்றாக்குறை ஏற்படும். அதிக வட்டிக்கு கைநீட்டி யாரிடமும் கடன் வாங்காதீங்க. செலவை குறைக்க வேண்டும். எதிர்காலத்திற்கு சேமிப்பு நல்லது என்பதை உணர வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கப் போகின்றது. சேல்ஸ்மேன் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். உறவுகளோடு கொஞ்சம் நாசுக்காக பழகவும்.

- Advertisement -