இன்றைய ராசி பலன் – 26-01-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
இன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:
rishabam
இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மிதுனம்:
Midhunam
மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கடகம் :
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்:
simam
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வழியில் சுபச்செலவு ஏற்படக்கூடும்.

கன்னி:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதி தாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மை கள் நடக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களை விட்டுப்பிடிப்பது நல்லது.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிர்க்கவும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

- Advertisement -

விருச்சிகம்:

பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர் களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பேசும்போது பொறுமை அவசியம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மகரம்:
magaram
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகை யால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

மீனம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவில் கவனம் தேவை. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -