Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (26/05/2019): புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கார்த்திகை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். சிலருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். பெற்றோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். திட்டமிட்ட விஷயத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.செய்த நற்செயலுக்கான நன்மை தேடி வரும். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கவனமாக இருக்கவும்.

கன்னி:
Kanni Rasi

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு சரியாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரியங்களில் பொறுமை தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். நீண்டநாள்களாக தாயிடம் எதிர்பார்த்த உதவி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:
virichigam

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்

மீனம்:
meenam

காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -