மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். முன்கோபப்பட கூடாது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. இன்று விடுமுறை நாள். கொஞ்ச நேரம் குடும்பத்தோடு சேர்ந்து இருந்து, நேரத்தை செலவு செய்யுங்கள். மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும். முடிந்தால் மாலை நேரத்தில் கோவிலுக்கு செல்வது கூடுதல் மன அமைதியைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு இருக்கும். தேவையற்ற சங்கடங்கள் மனதில் இருந்து விலகும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். வீண்விரய செலவுகள் குறையும். நீண்ட நாள் பகையோடு இருந்து வந்த உறவுகள் நண்பர்கள் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. உங்களுடைய கடமைகளை சரியாக முடித்து விட்டால், நிச்சயம் எதிர்பாராத நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய வேலையையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். வேலையில் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. கடன் கொடுக்கக் கூடாது. புது வாடிக்கையாளர்கள், புது ஒப்பந்ததாரர்களை முழுசாக நம்பி ஒரு விஷயத்தை ஒப்படைக்க வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வியாபாரத்திற்கு புதிய முதலீடுகளுக்கு உண்டான வங்கி கடன் முயற்சிக்கலாம். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள், சின்ன சின்ன வம்பு சண்டைகள், வேலையில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது உங்களுக்கு நிறைய நல்ல அனுபவங்களை கொடுக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையில் இருப்பீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு உடனடியாக கிடைக்கும். சக மனிதர்களின் உதவியை பெறுவீர்கள். உறவுகளுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் மனதில் உறுத்தி கொண்டே இருந்த ஒரு விஷயம் சரியாகிவிடும். குற்ற உணர்ச்சி நீங்கும். நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் திறமையாக செயல்படுவீர்கள். சிந்தனை மேலோங்கும். சக மனிதர்களிடம் பழகும் போது உங்களுடைய நல்லவிதமான குணாதிசயம் வெளிப்படும். வசீகரத் தோற்றத்தால் நாலு பேரை ஈர்க்கக்கூடிய அளவுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. சுகமான அனுபவங்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பல நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு தேவையான வேலைகளை பார்த்து பார்த்து செய்து கொள்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.