இன்றைய ராசிபலன் – 26 அக்டோபர் 2023

daily-rasi-palan26
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைக்காத நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருக்க வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் யாரிடத்திலும் பொய் சொல்லாதீங்க. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அரசாங்கத்திற்கு எதிராக எந்த வேலையையும் செய்யாதீங்க. உங்களுக்கு பிரச்சனையே வந்தாலும் நேர்மையாகவே இருக்கவும். அப்போதுதான் எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. மன அழுத்தம் இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியாக செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் இன்றைய நாளை கடக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். புதிய முயற்சிகளை அடுத்த நாள் தள்ளி போடுங்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மேல் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடந்துக்கோங்க. பணம் காசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்கணும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய அயராது உழைப்பீர்கள். மனைவியின் பாராட்டை பெறுவீர்கள். தாய்மாமன் வழி உறவு உங்களுக்கு நல்லது செய்யும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நண்பர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் சின்ன சின்ன சண்டைகளை போடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனம் தளராதீங்க. எல்லாம் சரியாகிவிடும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். உயிர் நண்பனாக இருந்தாலும் கண்மூடித்தனமாக நம்பாதிங்க. குடும்ப விஷயத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முன்பின் தெரியாத நபர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். உங்களுடைய பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டாம். அக்கறையோடு பாருங்கள் போதும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நற்பலன்கள் நிறைய இருக்கிறது. நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை காது கொடுத்து கேட்க நாலு பேர் இருப்பாங்க. நிறைய பஞ்சாயத்துகளை செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய பெயர் புகழ் ஊர் முழுவதும் பரவும். வாக்குத்திறமை உங்களுக்கு அதிகரிக்கும். திறமையாக செயல்பட்டு பிரச்சனைகளுக்கு ஒரு வழியை சொல்லும். அளவுக்கு பெரிய மனுஷங்களா இருக்க போறீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் அசதி ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை ஓயவே ஓயாது. ஒரு சிலர் இன்று தீபாவளி பர்சேஸ செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தீபாவளி செலவுக்கு தேவையான பணம் கையை வந்து சேரும். அலைச்சல் இருந்தாலும் ஒரு மாதிரி இந்த நாள் நல்ல நாளாகவே கலந்து செல்லும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யாதீங்க. முன்பின் தெரியாத விஷயத்தில் காலை வைக்கக்கூடாது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மூன்றாவது நபர் சொல் பேச்சைக் கேட்டு பெரிய அளவில் முதலீட்டை செய்யாதீங்க. பணம் நஷ்டம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது உங்களை ஏமாற்றுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பம் குழந்தை மனைவி என்று நேரத்தை கழிக்க வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன தவறுகள் செய்தால் கூட மேலதிகாரிகள் பெருசா திட்டுவாங்க. முன்கோப படாதீங்க. பொறுமையாவே இருங்க எல்லாம் சரியாகிவிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று திட்டமிட்டபடி எல்லா வேலையையும் செய்து முடிக்க முடியாது. சின்ன சின்ன தடங்கல்கள் ஏற்படும். மனகசப்பான சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களை முழுசாக நம்ப வேண்டாம். வாழ்க்கை துணையிடம் சண்டை போட வேண்டாம். மாச கடைசி வந்து விட்டது அல்லவா. கொஞ்சம் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் சமாளித்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -