இன்றைய ராசி பலன் – 19-11-2019

Rasi Palan

மேஷம்:
mesham
இன்று தங்கள் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுவீர். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள்  ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.  பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ரிஷபம்:
rishabam
காலையில் காபி பழக்கத்தை கை விட்டால் இதய நோயாளிகளுக்கு ஏற்படும் பிரஷரை தவிர்க்கலாம் . தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் குறை காணும் போக்கை உறவினர்கள் குற்றம் சொல்வார்கள். ஆகையால் அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீங்கள் உணர்ந்திட வேண்டும். காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். ஒரு கடினமான காலகட்டத்துக்குபிறகு இன்று ஒரு இனிமையான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

மிதுனம்:

Midhunam
உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும். அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் கவனமின்மையால் சில இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது.

கடகம் :
Kadagam
இன்று நீண்டகாலமாக இருந்த வியாதில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை கவர்வதுக்காக அதிகம் செலவு செய்விர்கள் . பழைய உறவுகளால் பிரச்சனை ஏற்படும். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். இன்று உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனம் தேவை . நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் மனைவியை நேசியுங்கள். வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

- Advertisement -

சிம்மம்:
simam
உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். பரஸ்பர கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெடும் வாய்ப்பு அதிகம். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் இன்று திருப்தி தரும். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும்.

கன்னி:

மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். புதிய வாடிக்கையாளருடன் பேச்சு நடத்த இது அற்புதமான நாள்.

துலாம்:

இன்று உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். வீட்டை புதுப்பிக்கும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். உங்கள் மணவியை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக மகிழ்ச்சியான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

விருச்சிகம்:


உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கவலைகள் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். நீண்ட கால பண வரவு வந்து சேரும். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். இன்று உங்கள் வேலையை பலர் பாராட்டுவார்கள். இன்று பயணத்தை குறைத்து கொள்ளவும். உங்கள் புதிய முயற்சி பலனை உண்டாக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும்.

தனுசு:

பதற்றமாக எடுக்கும் முடிவுகல் சில பிரச்சினையை உண்டாகும். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் பொறுமையாக சிந்திக்கவும். இன்று வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் வேலையே கண்டு பலர் இன்று உங்களைப் பாராட்டுவார்கள். உங்கள் முயற்சிகள் பயனுள்ளதாக இன்று அமையும். திருமண வாழ்க்கையில் இன்று சிறு கசப்பு ஏற்பட்டு பின் உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.

மகரம்:
magaram
உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் கவலைகள் ஏற்படும். உத்யோகத்தில் சக பணியாட்களிடம் அனுசரிச்சு போங்கள். உங்கள் குடும்பத்தில் சுபகாரியம் உண்டாகும் .

கும்பம்:

நம்பிக்கை தரும் சிலவற்றை படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். இன்று எதிர்பார்த்த பண வரவு தாமதமாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சந்தோசமாக இருக்கும் நேரம். உங்கள் ரகசிய உணர்வுகள் அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு இப்ப சரியான தருணம் இல்லை.நேர்மையாகவும்,மண உறுதியுடனும் இருங்கள். உங்கள் திறமைகள் இன்று கவனிக்கப்படும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

மீனம்:

உடற்பயிற்சி செய்து நல்ல உடல் வடிவை பெறுவதற்கு முயற்சிப்பீர். நன்றாக சிந்தித்த பின்பே வியாபாரத்தில் முதலீடு செய்தால் பலன் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். இன்று சோர்வாக காணப்படுவீர்கள். வித்தியாசமான ரொமான்சை அனுபவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்க்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இருப்பார். இன்று உங்கள் துணையின் மேல் இன்னும் அதிகமாக காதல் வசப்படுவீர்கள்.

ராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.