இன்றைய ராசிபலன் – 27 அக்டோபர் 2023

daily-rasi-palan27
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆழமான யோசனை இருக்கும். எந்த விஷயத்திலும் ஒன்றுக்கு பலமுறை யோசிப்பீங்க. ரொம்பவும் குழப்பமான மனநிலை இருக்கும் சமையல் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். இன்று அமைதியாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களைத் தேடி கூடுதல் பொறுப்புகள் வரும். சொந்த தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உஷாரா இருந்துக்கோங்க.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக தான் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பு உங்களிடத்தில் இருக்கும். சில பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருடைய முகத்திரை கிழியும். நண்பர்களாக இருந்து உங்களுக்கு எதிரியாக மாறின சிலரை சரியாக அடையாளம் தெரிந்து கொள்வீர்கள். உங்களுடைய வெளிப்படையான பேச்சு சில புது எதிரிகளை உண்டாக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வருமானம் அதிகரிக்கும். தீபாவளி பர்சேசுக்கு  நல்ல வாய்ப்புகளும் கிட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று எந்த வேலையும் சரியாக நடக்காது. மனது குழப்பத்திலேயே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் வேலை பளுவும் அதிகமாக இருக்கும். சொந்த தொழிலில் பார்ட்னரோடு சின்ன சின்ன தகராறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் கவலைப்படாதீங்க. உங்களுடைய விடா முயற்சி நிச்சயம் உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு தலையாட்டுவார்கள். உங்கள் வார்த்தைக்கு ஒரு மரியாதை இருக்கும். மாமனார் வழி உறவின் மூலம் நல்லது நடக்கும். சொத்து தகராறில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது. பொன் பொருள் காசு பணம் இவைகளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கும். சரியான நேரத்தில் சரியான வேலையை செய்து நல்ல பெயர் வாங்குவீங்க.ஸவேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத வியாபாரிகளை முழுமையாக நம்ப வேண்டாம். கணவன் மனைவி இருவருக்குள் நல்ல அன்னோயூன்யம் இருக்கும். பண வரவு சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மந்தமான சூழ்நிலை இருக்கும். சுறுசுறுப்பாக எந்த வேலையிலும் ஆர்வம் காட்ட முடியாது. எல்லா வேலையிலும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக செய்யக்கூடிய வேலையால் கெட்ட பெயர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாருக்கும் எந்த வாக்கும் கொடுக்காதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்கவலை இருக்கும். சொந்த பந்தங்களுக்கு இடையே சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கடினமான வார்த்தையை பேசாதீங்க. மனைவி சொல்படி கேட்டு நடந்தால் பிரச்சனை இருக்காது. வியாபாரத்தில் வரக்கூடிய சிக்கல்களை சமாளிக்க போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சவால் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளிடம் முட்டி மோதிதான் சில பிரச்சனைகளை சரி செய்ய வேண்டி இருக்கும். சொந்த பந்தங்களே உங்களை புரிந்து கொள்ளாமல் பேசும். கவலைப்படாதீங்க. மனைவி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இவ்வளவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டதால், உடல் சோர்வு இருக்கும். தலைவலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தொலைபேசி எண் மூலம் நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி நிச்சயம் உண்டு. வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. உங்களுக்கு மனசு சரியில்லை வேலை செய்ய முடியவில்லை என்றால், அந்த இடத்தில் இருந்து ஒதுங்கி விடுங்கள். லீவு போட்டு விடுங்கள். அரைகுறை மனசோடு, அரைகுறை கவனத்தோடு வேலை செய்தால் இழப்பு உங்களுக்குத்தான். நண்பர் என்று சொல்லி புது மனிதர்கள் யார் வந்தாலும் கிட்ட சேக்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நல்லது என்று செய்ய நினைத்த காரியம், கெடுதலாக முடியும். ஏன் தான் இந்த வேலையை செய்தோமோ என்று கஷ்டப்படுவீர்கள். எல்லாம் அனுபவம் தான். இதில் நிதி நிலைமை வேற கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுக்கு காசு இல்லாததால் முன்கோபம் வரும். எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. இந்த பிரச்சனை ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். குலதெய்வத்தை கும்பிடுங்க.

- Advertisement -