இன்றைய ராசி பலன் -12-01-2020

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
mesham
சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால் விழிப்புடன் இருங்கள்.

ரிஷபம்:
rishabam
சமீபகாலமாக வெளுப்பான உணர்வு தோன்றினால் – இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனைகளும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று ஆபீசில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள்.

மிதுனம்:
Midhunam
இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள்.

கடகம் :
Kadagam
நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும்.

சிம்மம்:
simam
மன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும்.

கன்னி:

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

துலாம்:

மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும்.

விருச்சிகம்:

உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள்.

தனுசு:

இன்று களைப்பாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களுக்கு அப்செட் ஆவீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும் – அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

மகரம்:
magaram
நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும்.

கும்பம்:

உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.

மீனம்:

தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள்.

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.

- Advertisement -