இன்றைய ராசி பலன் – 27-12-2019

rasi palan - 27-12-2019
- Advertisement -

மேஷம்:
இன்றைய நாள் உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிட்டும். வேலை பளு காரணமாக ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது.

ரிஷபம்:
இன்றைய நாள் உங்களுக்கு வீண் விரயங்களை ஏற்படுத்தும் நாளாக இருக்கும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்காமல் தைரியமாக முடிவெடுப்பது நல்லது. உஷ்ணம் காரணமாக சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

- Advertisement -

மிதுனம்:
இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் எனினும் வீண் அலைச்சல் ஏற்பட்டு மன சோர்வினை உண்டாக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் தாமதம் ஏற்பட்டாலும் தடையின்றி நிறைவேறும். இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவது சிறந்தது.

கடகம்:
இன்றைய நாள் உங்களுக்கு வரவேண்டிய இடத்தில் இருந்து வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும் இனிய நாளாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாய்ப்புகள் தேடி வந்தால் தட்டிக் கழிக்காமல் அதனை ஏற்றுக்கொண்டு செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

- Advertisement -

சிம்மம்:
இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக அமையும். எந்த விஷயத்தை தொடங்கும் முன்பும் நன்கு யோசித்து ஆலோசித்த பின்பு முடிவெடுப்பது நல்லது. தியானம் யோகா போன்றவற்றை மேற்கொண்டால் மன அமைதி கிட்டும். கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி:
இன்று உங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. உங்கள் துணையுடன் நல்லிணக்கம் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
இன்று உங்கள் நாள் இனிய நாளாக இருக்கக்கூடும். மகிழ்ச்சியான செய்திகள் இல்லம் தேடி வந்தடையும் நாளாக இருக்கும். குடும்பத்துடன் உட்கார்ந்து ஒன்றாக உணவு அருந்தினால் உற்சாகத்துடன் நாள் முழுவதும் செயலாற்றலாம். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:
இன்று உங்களுக்கு தன வரவு திருப்திகரமாக இருக்காது எனவே விரக்தியில் ஆழ்ந்து இருப்பீர்கள். கவலைப்பட தேவையில்லை உங்களின் முயற்சி வீண் போகாது. தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் நல்ல பலன்களை பெறலாம். கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும். ஒருவர் மீதுள்ள கோபத்தை இன்னொருவர் மீது நீங்கள் காட்டுவதை தவிர்ப்பது நல்லது.

தனுசு:
இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சதா வேலை என்று இருக்காமல் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உங்களின் கஷ்டத்தை உங்கள் குடும்பத்தார் உணர்ந்து நடந்து கொள்வார்கள். மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் பிரச்சனை ஏற்படாமலிருக்க குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

மகரம்:
இன்று உங்கள் நாள் எதிர்பாராத விஷயங்கள் நடந்து குதூகலத்துடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்வது உங்களின் பலம் என்பதை நீங்கள் உணரும் நாளாக அமையும். தம்பதியரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்:
இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். தனவரவு திருப்திகரமாக அமையும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் குடும்பத்தாரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொலைதூர பயணம் நன்மையில் முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

மீனம்:
இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். பழைய நண்பர்கள் ஆதரவு கிடைத்து புதிய பாதைகள் தென்படும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எதையும் அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது. உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் விரைவில் கிட்டும். மன அமைதிக்கு கந்தனை வழிபடுவது சிறந்த பலனை அளிக்கும்.

- Advertisement -