இன்றைய ராசி பலன் – 27-2-2021

rasi palan - 27-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கி விடும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்கோபத்தால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புக்கள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேக்கநிலை பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகளில் நீங்கப் பெறும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்குவாதங்களில் தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தேவை இல்லாத நபர்களிடம் பேச்சு வார்த்தையை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்கு சாதகமாக முடியக் கூடும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கூடுமானவரை எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது காலதாமதம் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமை மீது உங்களுக்கே புதிய நம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றிகளை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய பொருள் சேர்க்கை சோகத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்களுடைய பலவீனம் எது? என்பதை அறிந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடனிருப்பவர்களே தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத வகையில் சில மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு மற்றும் வெளி யே தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்பட்ட வந்த மனக்குழப்பம் நீங்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். செய்யும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -