இன்றைய ராசி பலன் – 28-08-2020

Rasi Palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் காண்பீர்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிலும் நிதானத்தை கையாள்வது மிகவும் நல்லது. எதிர்பாராத வகையில் சில உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களில் மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சி தரும். முன்பின் தெரியாதவர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தை எச்சரிக்கையாக கையாள வேண்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு அக்கறை அதிகரித்து காணப்படும். ஒருவரை ஒருவர் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உற்சாகத்தை ஊட்டுவதாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் மற்றும் டென்ஷன் இருக்கும். குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான். உங்களுடைய நீண்ட உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிவ வழிபாடு மற்றும் பிள்ளையார் வழிபாடு செய்வது நல்ல பலன்கள் தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்கள் ராசிக்கு ஏற்றம் மிகுந்த பலன்கள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் எதிர்பாராத வகையில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களுக்கு தெய்வீக விஷயங்கள் எடை அதிகரித்து காணப்படும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்ல பலன் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். வெளியூர் மற்றும் வெளிநபர்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை காணலாம். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சமாளித்துவிடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். பிள்ளையார் வழிபாடு ஏற்றம் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேடிக்கையாக பேசும் ஆற்றல் கொண்ட உங்கள் ராசிக்கு யோகமான நாளாக இந்த நாள் அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் சக நண்பர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் காணலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமையே கண்கண்ட தெய்வம் என நினைக்கும் உங்கள் ராசிக்கு நல்ல நாளாக இந்த நாள் அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை சிறப்பாக காணலாம். வெளியில் இருந்து வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதையும் பலமுறை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் கை கூடும் நேரத்தில் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான ஒற்றுமை குறையும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு ஏற்றம் தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -