இன்றைய ராசிபலன் – 28 அக்டோபர் 2023

daily-rasi-palan28
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்களை விட பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் நடந்தால் உங்களுக்கு சில இழப்புகள் ஏற்படும். வார்த்தையில் கவனம் தேவை. வியாபாரத்தில் முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் மேல் தவறு இல்லை என்றால் தைரியமாக உண்மையை சொல்லவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த நட்பு மீண்டும் உயிர் பெறும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனசுக்கு பிடித்தமான விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். காதல் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்து வேலைகளை செய்ய வேண்டும். அலட்சியமாக இருந்தால் பிரச்சனைகள் வரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்து கைக்கு வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமை காக்கவும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீட்டை போட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்கவும். எதிர்த்து பேச வேண்டாம். வேலையை இழந்தால் பிரச்சனை உங்களுக்குத்தான். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.  சிலபேர் உங்களை எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். முன்கோபடாதீர்கள், வியாபாரத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை தட்டிக் கொடுத்து தான் வாங்க வேலை வாங்க வேண்டும். அதிகாரம் செய்யக்கூடாது. அப்படி அதிகாரம் செய்தால் சின்ன சின்ன இழப்புகள் வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று எதிரிகளை போராடி ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நீங்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் குறை சொல்ல நாலு பேர் உங்களை சுற்றி நிற்பார்கள். அவரைகளை சமாளிப்பது பெரும் சவால்தான். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். மனைவிக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி பரிசளித்து மனமகிழ்ச்சி பெறுவீர்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மன அழுத்தம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டவே நேரம் சரியாக இருக்கும். ஹாஸ்பிடல் சென்று வர வேண்டிய சூழ்நிலை நிலவும். வீண் விரைய செலவுகள் உண்டாகும். இதனால் மற்ற விஷயங்களில் உங்களால் அதிக கவனம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கணும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுடைய மனதை புரிந்து கொண்டு நடப்பீங்க. வீட்டில் அம்மாவுக்கு தேவையான விஷயம், அப்பாவுக்கு தேவையான விஷயம், மனைவி குழந்தைகள் என்று எல்லாருக்கும் பிடித்தபடி பரிசு பொருட்களை வாங்கி கொடுக்க போறீங்க. தீபாவளிக்கு செலவு செய்ய கையில் காசு வந்திருக்கும். வீட்டில் இருப்பவர்களை மன மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டிய ஒரே வேலை தான் இன்று உங்களுக்கு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை பல விஷயங்களில் அலைபாயும். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் இருக்காது. யோசித்து யோசித்து தலைவலி வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்த காலையில் ஓம் நமசிவாய மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். எல்லாம் அந்த கடவுளின் அருளால் தான் நடக்கிறது என்று நம்புங்கள். முக்கியமான முடிவை நாளை தள்ளி போடுங்க.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று புத்திசாலித்தனத்தோடு செயல்படுவீர்கள். உங்களை குறை கூறும் நபருக்கு முன்னால் தலை நிமிர்ந்து சில விஷயங்களை சாதித்து காட்டுவீர்கள். பெயர் புகழ் பதவி உங்களை தேடி வர போகும் நாள் இது. விடாமுயற்சியுடன் செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியை கொடுக்கும். இரவு நிம்மதியான தூக்கம் வரும். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று எதிர்காலத்திற்கு தேவையான சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் நலனிலும் மனைவியின் நலனிலும் அதிக அர்க்கரை காட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன தலைவலி இருக்கும். என்னதான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. கவனத்தோடு செயல்படவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பண வரவு மன அமைதியை கொடுக்கும். நிதி நிலைமை கொஞ்சம் மேலோங்கும். அன்றாட செலவுக்கு வழியில்லை என்ற நிலைமை மாறி இருக்கும். மனதில் லேசான சந்தோஷம் பொங்க தொடங்கி இருக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். செய்யும் வேலையில் மனதிருப்தி இருக்கும்.

- Advertisement -