இன்றைய ராசி பலன் – 28-2-2021

rasi palan - 28-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நிதானமாக செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. விஷயங்களில் தவறான புரிதல்கள் இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களுடைய ஆதரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் தவறான புரிதல்கள் உண்டாக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நண்பர்கள் மூலம் ஆதாயங்கள் காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் யாரையும் நேரடியாக எதிர் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பதற்கு மாறாக சில விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத மன சஞ்சலம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நிம்மதி காணலாம்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிரிகளின் தொல்லை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கசாத்தியக்கூறுகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஓய்வு எடுத்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை ஒத்துழைப்புடன் செல்வது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நன்மையான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கு உரிய புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தீட்டிய திட்டங்கள் யாவும் திட்டியபடியே எளிதாக நிறைவேறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வரிசையாக வெற்றி வாய்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் மந்த நிலையில் இருந்து வந்த வியாபாரம் செழிப்பாக முன்னேற்றப் பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் தீர்த்துக் கொள்வீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைக்கு உரிய புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பணம் புழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்த நிலை மாறும். திடீரென புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து அதிக லாபத்தை காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவ வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -