இன்றைய ராசி பலன் – 28-2-2020

rasi palan - 28-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம். உங்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு சரியான தருணமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் உண்டு. புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் நீங்கள் வெற்றிநடை போடும் நேரம் இது. உங்களின் லட்சியம் நிறைவேற பாதைகள் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வரும். சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் அந்தஸ்து, மரியாதை உயரும். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். நல்ல சூழ்நிலையில் இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காலதாமதம் ஆனாலும் வெற்றிகிட்டும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் பணி மாற்றம் கிட்டும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபம் காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். கடன் பிரச்சனைகள் நீங்கும். கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரயங்களை சந்திக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலையில் இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற விரயங்கள் ஏற்படக்கூடும். எந்த ஒரு முடிவையும் இன்றைய நாளில் எடுக்காமல் இருப்பது நல்லது. ஓரிரு நாள் கழித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரம் விருத்தி அடைய சில முயற்சிகளை எடுப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையினால் நன்மை உண்டாகும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கூட்டுத் தொழில் முயற்சியில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாக தொழில் புரிவதை விட தனியாகவே தொடங்குவது நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் சுமூகமான சூழ்நிலையை காண்பீர்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கட்டாயம் வெற்றி அடையும். பெண்களுக்கு திருமண யோகம் கூடிவரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய கல்வி வாய்ப்புகள் உண்டாகும். மேல்நாடுகளில் கல்வி கற்பவர்கள் வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபார விருத்தி உண்டாகப் பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வதனால் மன அமைதி கிட்டும். மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல் கிட்டும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழில் பெண்கள் ஏற்றம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். பிள்ளைகளின் பெற்றோர்கள் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவது நல்லது. தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்துவது நல்லது. தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய சவால்கள் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் சில சிக்கல்கள் ஏற்படலாம். உத்தியோகம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் லாபம் காணப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபார விருத்திக்கு சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்விக்கு உதவிகள் கிட்டும். பெண்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்று கிடைக்கப் பெறும். பெண்களுக்கு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களின் பலவீனமே சிலருக்கு பலமாக அமையலாம். எந்த முடிவை எடுப்பதற்கு முன்னரும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து எடுப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் சில சங்கடங்கள் உருவாகலாம். உங்களுக்கு இருக்கும் மேல் அதிகாரிகளுடனான நட்புணர்வு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.