இன்றைய ராசி பலன் – 29-08-2020

rasi palan - 29-8-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் லாபம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ராசிக்கு வியாபார ரீதியான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகள் மேலும் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும் என்பதால் டென்ஷன் இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் காணப்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியாக சிக்கல்கள் இருந்தாலும் அதை திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு உற்றார் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வீடு தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடிக்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத பணவரவு திடீரென வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளால் தொல்லைகள் வரும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் ரீதியான விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அமோக வெற்றி பெறும். இன்றைய நாள் சிறப்பான அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிகழ்வுகள் நடைபெறும். பணவரவுகள் சீராக இருக்கும். வருமானம் பெருகும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார ரீதியான நெருக்கடிகளை உங்கள் திறமையால் திறம்பட சமாளிப்பீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் வழிபாடு செய்வது நல்ல பலன்தரும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்கள் ராசிக்கு எதிர்பாராத வகையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஏற்றத்தை நோக்கி செல்லும். மாணவர்களுக்கு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவரையும் எளிதில் எடைபோடும் ஆற்றல் கொண்ட உங்கள் ராசிக்கு முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பின்னர் உடனே ஒன்றுகூடி விடுவீர்கள். வாகன வகையில் சிலருக்கு தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.