இன்றைய ராசிபலன் – 29 அக்டோபர் 2023

daily-rasi-palan29
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு தலைக்கு மேலே இருக்கும். எந்த வேலையை முடிப்பது என்றே தெரியாது. அந்த அளவுக்கு பிசியாக இருக்கப் போகிறீர்கள். சின்ன சின்ன திட்டு வாங்க கூட வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். வீட்டில் சுப செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு ஏற்படும். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்க வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் அலட்சியமாக இருப்பீங்க. பொறுப்போடு நடந்து கொள்ள மாட்டீர்கள். ஏதாவது முக்கியமான விஷயங்களுக்கு முடிவெடுப்பதாக இருந்தால் நாளை தள்ளி போடுங்கள். அடுத்தவர்களுக்கு, நீ இதை செய், நீ அதை செய், என்று எந்த ஐடியாவும் கொடுக்காதீங்க. பிரச்சனை ஆகிவிட்டால் பிறகு உங்களை தான் வந்து கேள்வி கேட்பார்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நம்ப தகாத மனநிலை இருக்கும். எந்த விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்ப மாட்டீங்க. எல்லாவற்றையும் சந்தேக கண்ணோடு தான் பார்ப்பீர்கள். இதனால் உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் மனைவி இவர்களிடையே சின்ன சின்ன சண்டை தகராறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து வார்த்தையில் கவனத்தோடு பேசுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மிக அற்புதமான நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். கஷ்டமா செய்ய வேண்டிய வேலையை கூட சுலபமாக செஞ்சு முடிச்சிடுவீங்க. பாராட்டுகளும் கிடைக்கும். வீட்டு வேலைகளை எல்லாம் பெண்கள் சுறுசுறுப்பாக செய்வீர்கள். பெரியவர்களுடைய ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். பெரியவர்களின் சந்திப்பு சந்தோஷத்தை கொடுக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு இருக்கும். வியாபாரத்தில் புதுப்புது ஐடியாக்கள் தோன்றும். நல்ல முன்னேற்றத்தோடு வாழ்க்கையை நடத்திச் செல்ல பிளான் பண்ணுவீங்க. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கான நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசளிப்பீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய அணுகுமுறை அடுத்தவர்களை கவரும். வெளியூர் பயணம் வெற்றியை கொடுக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். பிடித்தவர்களிடம் திட்டுவாங்க வாய்ப்புகள் உள்ளது. தொலைபேசியின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வாழ்க்கை துணையிடம் சின்ன சின்ன சண்டை வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வார்த்தைகளை கவனத்தோடு பேசுங்கள். முன்கோபத்தை குறைக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை எடுக்கலாம். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். சொந்த தொழிலில், எதிர்பாராத சந்திப்பில் நண்பர் ஒருவருடைய ஐடியா உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். பெரிய மனிதர்களின் நட்பு லாபகரமாக அமையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவு சரியாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். திங்கட்கிழமைக்கு தேவையான வேலையை கூட இன்றே செய்து முடித்து விடுவீர்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளுடன் இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று இரவு நேர உணவை சாப்பிட வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் செலவு ஆகும். இருந்தாலும் சந்தோஷத்துக்கு குறை இருக்காது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். தோல்விகள் எல்லாமே உங்களுக்கு அனுபவம் தான். ஆகவே தோல்விகளைக் கண்டு துவண்டு போகக் கூடாது. எல்லா வேலையும் இன்று கொஞ்சம் மெதுவாக தான் செய்வீங்க. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். குடும்பத்தோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட நேரம் கிடைக்கும் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் நிறைந்த நாள். பேச்சு திறமை வெளிப்படும். குடும்பம் குழந்தையோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சொந்த தொழிலில் புதிய முயற்சிகளை செய்யலாம். புதிய முதலீட்டுகளை போடலாம். பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்களைப் பற்றி நீங்களே சிந்திக்க என்று நேரம் கிடைக்கும். தொலைபேசியின் மூலம் மேலதிகாரிகளிடமிருந்து வரக்கூடிய செய்தி மனசை சந்தோஷப்படுத்தும். சேல்ஸில் உள்ளவர்கள் சொன்ன டார்கெட்டை முடிப்பீங்க. கட்டுமான தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஆண் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள்.

- Advertisement -