இன்றைய ராசி பலன் – 29-11-2017

0
2093

மேஷம்:
mesham
இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. இனியும் காபி குடித்தால் இதயத்தில் தேவையற்ற பிரஸ்ஸர் ஏற்படும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் குறை காணும் போக்கை உறவினர்கள் குற்றம் சொல்வார்கள். அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீங்கள் உணர்ந்திட வேண்டும். இதனால் உங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. குணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். ஒரு கனினமான காலகட்டத்துக்குபிறகு இன்று ஆபீசில் ஒரு இனிமையான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

ரிஷபம்:
rishabam
உங்களை பிட்டாகவும் நன்றாகவும் வைத்துக் கொள்ள அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார். புதிய முயற்சியை தொடங்கும் சிந்தனையில் இருந்தால் – விரைவாக முடிவெடுங்கள் – நட்சத்திரங்கள் சாதகமாக இருக்கின்றன – உங்கள் தேவைகள் பற்றி பயப்பட வேண்டாம். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும்.

மிதுனம்:
Midhunam
ஒரு நண்பர் கண்டுகொள்ளாமல் இருப்பது உங்களை காயப்படுத்தும். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களை பாதிக்கக் கூடாது. மாறாக துன்பத்தைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்களுக்கு தெரியுமா உங்கள் துணை தான் உங்களது ஏஞ்சல். நம்பவில்லையா? இன்று அதனை நீங்களே அனுபவித்து உணர்வீர்கள்.

கடகம் :
Kadagam
தங்கள் கனவுகளை நனவாக்க வீட்டையும் ஆரோக்கியத்தையும் புறக்கணிக்கும் நபர்களைப் போல நீங்கள் நடந்து கொண்டு அவர்களின் வழியை பின்பற்றாதீர்கள். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். உங்கள் பாஸ் கவனிப்பதற்கு முன்பு, நிலுவையில் உள்ள வேலைகளை முடித்திடுங்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்

சிம்மம்:
simam
உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.

கன்னி:

வாழ்க்கையில் சீரியஸ் தன்மையை தவிர்த்திடுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். நீங்கள் தனிமையாக உணரும்போது குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள். மன அழுத்தத்தில் இருந்து உங்களை அது காப்பாற்றும். நியாயமான முடிவுகள் எடுக்க அது உங்களுக்கு உதவும். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் – நிறைய வாய்ப்புகள் வரும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.
துலாம்:

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அலுவலக வேலையில் அதிகமாக மூழ்கியிருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும்.

விருச்சிகம்:

ஆரோக்கியத்தை நிச்சயமாக கவனிக்க வேண்டும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும்.

இதையும் படிக்கலாமே:உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்

தனுசு:

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் துணையின் உடல் னலத்தை எண்னி நீங்கள் கவலையுறுவீர்கள்.

மகரம்:
magaram
எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்:

இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள்.

மீனம்:

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள் – தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்