இன்றைய ராசி பலன் – 3-04-2018

12-rasi-jothidam

மேஷம்:

mesham
வாழ்க்கைத்துணை உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனதில் இணை புரியாத சந்தோசம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

ரிஷபம்:

rishabam
அனுகூலமான நாள். தாய்வழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு மனக்கசப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்:

Mithunam Rasi
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவணம் செலுத்துங்கள். பிள்ளைகளின் தேவைகளை நிரைநேற்றுவீர்கள். எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மாலையில் முக்கிய பிரமுகர் ஒருவர் அறிமுகமாவர். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும்.

- Advertisement -

கடகம் :

Kadagam Rasi
மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். தந்தை வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோகியதில் அக்கறை செலுத்துங்கள். உணவு பழக்கத்தை கடைபிடியுங்கள். அலுவலத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

simmam
புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குங்கள். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாகும். தாய்வழி உறவுகள் வருகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும், அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கன்னி:

Kanni Rasi
குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகம் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். பிள்ளைகளால் வின் செலவுகள் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

துலாம்:

Thulam Rasi
தாய்வழி உறவுகள் வருகையால் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

விருச்சிகம்:

Virichigam Rasi
வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சற்று கூடுதலாக இருக்கும். அலுவலகம் பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கலுக்கு அனுகூலமான நாள்.

இதையும் படிக்கலாமே:
            ஏப்ரல் மாத ராசி பலன் 2018

தனுசு:

Dhanusu Rasi
பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது கவணம் செலுத்துங்கள்.

மகரம்:

Magaram rasi
அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாகும்.தாய்வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் நிலவும். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்:

Kumbam Rasi
சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். தந்தை வழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். வீண்செலவுகள் ஏற்படக்கூடும், பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். மாலையில் குடும்பத்தாருடன் குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் கூடுதலாக அமையும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

மீனம்:

meenam
தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவணம் செலுத்துங்கள். பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். அலுவலகம் பணி காரணமாக சற்று சோர்வாக இருப்பிர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.