இன்றைய ராசி பலன் – 3-7-2020

rasi palan - 3-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளை தீர்க்கும் நாளாக அமையும். குடும்பத்தில் நிலவி வந்த சங்கடங்கள் நீங்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நந்தி பகவானை வழிபட்டு வர நல்ல பலனை பெறலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக அமையும். புதிய முடிவுகளையும் முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. சிறு சிறு வியாபார தடைகள் வர வாய்ப்புண்டு. கூட்டாளிகளிடையே அளவாக பேசுவது நன்மை தரும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பண வரவு செலவுகள் கவனம் தேவை. அரசாங்க வழிப் பிரச்சினைகள் தீரும். வேலைகளில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த தங்கு தடைகள் நீங்கும். கால பைரவரை வணங்கி வர ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக உழைக்கக் கூடிய நாளாக அமையும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். தொழிலாளிகள் அலைக்கழிக்கப்படுவீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். நரசிம்மனை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமையும். அலுவலகத்தில் திடீர் பதவி உயர்வு ஊதிய உயர்வு ஏற்படும். சங்கடங்கள் விலகி மனநிம்மதி அடைவீர்கள். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமோகமான நாளாக அமையும். கடன் தொல்லைகள் நீங்கும். சமூக பிரச்சனையில் நாட்டம் காண்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிலும் பதட்டப்படாமல் நிதானித்து செயல்படுவது நல்லது. விஷ்ணு பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் மிகுந்த நாளாக காணப்படும். தொழில் புரிபவர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரியிடம் அனுசரித்துப் போவதால் லாபம் காண்பீர்கள். அளவாகப் பேசுவதால் வீண் விமர்சனங்களை தவிர்ப்பது. குடும்பத்தினருடன் அன்பு அதிகமாகும். பைரவர் வழிபாடு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் நாளாக அமையும். எந்த செயலையும் கவனத்துடன் செய்வது நன்மை தரும். கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பெருந்தேவித் தாயாரை வழிபட்டு வர சங்கடங்கள் தீரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகமாக ஏற்படும் நாளாக அமையும். எண்ணிய செயல்கள் எல்லாம் வெற்றி முடியும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வீண் அலைச்சலைக் தவிர்க்கவும். பிள்ளைகளின் மற்றும் பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியடையும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளால் லாபம் காண்பீர்கள். மனைவி பெற்றோர்களிடம் ஆலோசித்து புதிய முதலீடு செய்வது நல்லது. நண்பர்களிடம் எச்சரிக்கையாக பேசணும். விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய நல்ல நாளாக அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் நன்மை உண்டாகும். மாணவர்கள் தங்கள் துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் விலகும். ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர சுபிட்சம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரையம் நிறைந்த நாளாக அமையும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறு குறு தொழில் செய்வதற்கு பொருளாதாரத்தில் இறக்கங்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். வேலைப்பளு அதிகமாக வாய்ப்புண்டு. சந்திர பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர வெற்றியைப் பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -