இன்றைய ராசி பலன் – 30-01-2018

jan30

மேஷம்:
mesham
இன்று மகிழ்ச்சியான நாள்.மாமன் வழி உறவுகளால் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு அலுவலக பணிகளால் திடீர் பயணம் ஏற்படலாம்.வாழ்கை துணைவியிடம் இருந்து உற்சாகமான செய்தி வந்து சேரும்.இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் நினைத்த லாபம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
இன்று உங்கள் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு சங்கடங்கள் வந்து விலகும். தாய் வழி உறவுகள் மூலம் உதவி கேட்பார்கள். அலுவலகத்தில் இன்று பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கவனம் தேவை. சிலர் வெளியூர் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் மூலம் நன்மை உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
இன்று சிலருக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை இருக்காது. இன்று தெய்வபக்தி அதிகரிக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய பொருட்கள் வாங்கி சேர்க்க முயல்விர்கள்.

கடகம் :
குடுப்பதரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று எதிர்பாராத நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சிலர் தெய்வ பிறத்திணைகளை நிறைவேற்ற முயல்விர்கள். இன்று எதிப்பாராத செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

சிம்மம்:
அலுவலகத்தில் இன்று உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள், அதனால் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் நினைத்த லாபமும், விற்பனையும் முன்பைவிட அதிகரிக்கும். இன்று உற்சாகமாக இருப்பீர்கள். எதிர் பார்தவேளைகள் சுமுகமாக முடியும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது.

கன்னி:

இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த தகவல் வருகையால் குடும்பத்தில் மாகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க வேளையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த காரியங்கள் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தாருடன் பயணம் செய்ய நேரிடலாம்.

துலாம்:

இன்று உங்கள் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படலாம். சிலர் குடும்பத்தாருடன்
வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சிலருக்கு தொல்லைகள் வந்து விலகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

விருச்சிகம்:

உங்கள் வாழ்கைதுணைவியின் உறவுகள் உதவி கேட்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று வழக்கமான வேளைகளில் மட்டும் ஈடுபடுங்கள். அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகரிக்கும், சக பணியாளர்கள் உதவியுடன் அதை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் இருக்காது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு:

சகோதர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். இன்று மாலையில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். மாமன் வழி உறவுகளிடம் இருந்து எதிர் பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்க வேலைகளை முடிக்க தாமதமாகும். அலுவலகத்தில் நிதானமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் இன்று சற்று தொய்வு ஏற்படலாம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்.

Advertisement

மகரம்:
magaram
சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபமும் ,வியாபாரமும் சுறுசுறுப்பாக இருக்கும். அலுவலகத்தில் இன்று பணிச்சுமையால் சோர்வாக இருக்கக்கூடும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். இன்று புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தாருடன் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.

கும்பம்:

இன்று மகிழ்ச்சியான நாள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உற்சாகமாக உரையாடுவீர்கள். குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று வழி படுவீர்கள். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகையால் செலவு ஏற்படும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ பிராத்தனைகளை நிறைவேற்ற பயணம் செய்விர்கள்.

மீனம்:

இன்று வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அலுவலக பணிகளில் சற்று கவனமாக இருங்கள். தாய் வழி உறவுகளால் இன்று மனதுக்கு உற்சாகமான செய்தி வரும். ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். இன்று எதிர்பாராத  செலவுகள் ஏற்படும். பிறகு சமாளித்து விடுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.