இன்றைய ராசி பலன் – 30-04-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
மனம் உற்சாகமாகக் காணப்படும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்:

midhunam
உற்சாகமான நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
பிற்பகல் வரை எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

சிம்மம்:

simmam
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காலைப் பொழுது இதமாக விடியும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

துலாம்:

Thulam Rasi
இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்:

virichigam
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

தனுசு:

Dhanusu Rasi
எதிர்பாராத தனலாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasi
இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் ஆலய தரிசனம் செய்வீர்கள்.

கும்பம்:

Kumbam Rasi
பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மீனம்:

Meenam Rasi
வீண் அலைச்சல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -