இன்றைய ராசி பலன் – 30-08-2020

rasi palan - 30-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் மூலம் நன்மை தரக்கூடிய செய்திகள் வரும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தெரியாத விஷயத்தை பற்றி தேவை இல்லாத ஆலோசனைகள் யாருக்கும் கொடுக்க கூடாது. வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு உண்டாகும். பொருளாதாரப் பிரச்சினைகள் காணப்பட்டாலும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவீர்கள். நண்பர்கள் ஆதரவால் புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு தேவையற்ற பயணங்களையும் அலைச்சல்களையும் சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும்.நவீன உபகரணங்கள் வாங்கும் முயற்சிகள் பலன் தரும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அனுகூலமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும்.பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கூடுதல் பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த குளறுபடிகள் சீராகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை சந்தித்தாலும் எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிவ வழிபாடு நன்மை தரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத நன்மைகள் நடைபெறக் கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் அனுகூலமான பலன்களை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு நண்பர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம் எனவே முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத வகையில் பண வரவுகள் சிறப்பாக அமைய இருப்பதால் வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நிம்மதி தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். சுப காரியங்கள் விரைவில் கை கூடும். அதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலை பளு காரணமாக அசதி உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் பொருளாதாரப் பிரச்சினையை சமாளிப்பது சிரமம் உண்டாகும். பணத்தட்டுப்பாடு காரணமாக கடன் வாங்க நேரிடலாம். ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -