இன்றைய ராசி பலன் – 31-10-2020

rasi palan - 31-10-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு சாதகமாகவே மாறும். குழப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தீர்வு சுமூகமாக இருக்கும். பொருளாதார ரீதியான செலவுகளை சமாளிக்க கூடிய திறமை உங்களிடம் இருக்கும். உத்தியோக ரீதியாக உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். பொருளாதார ரீதியான செலவுகளை கட்டுக்குள் கொண்டுவர சிரமப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான ரீதியான பிரச்சனை இருக்கும். பணப்பற்றாக்குறை கணவன் மனைவிக்கு இடையே சில சங்கடங்களை உருவாக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். விடாமுயற்சி தேவைப்படும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் தான் மன அமைதியுடன் இருக்க முடியும். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருந்தால் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாமர்த்தியமாக செயல்படும் நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் உங்களை சுற்றி இருக்கும் பகைவர்களை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில்முறை போட்டிகள் அதிகரித்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடம் அதிகமாகவே காணப்படும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறக் கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய நண்பர்கள் ஆலோசனை கேட்க பயன்படுத்திக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. நீண்டநாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளை எதிர் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் வீண் விரயங்களை ஏற்படுத்தலாம். கண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் மற்றும் டென்ஷனை ஏற்படுத்தலாம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில்முறை போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்ததைவிட சாதகப் பலன்கள் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் நினைத்ததை சாதிக்கும் நாளாக அமையும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காண்பீர்கள். வேலை வாய்ப்பை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடன் பிரச்சினைகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிடும் வாய்ப்புகள் உண்டு. ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றிய புரிந்துணர்வு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சுபமான முடிவுகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே கடும் சலசலப்புக்கு நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான லாபம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.