இன்றைய ராசிபலன் – 31.05.2020

Today Rasi Palan Tamil

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். சுப விசேஷத்திற்காக வேலைகளை இந்த வாரம் தொடங்க வேண்டாம்.  தள்ளிப் போடுவது மிகவும் நல்லது. சொந்த தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். அலுவலகத்தில் யாரிடமும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக தான் பிறக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வரக்கூடிய வருமானத்தை சிறிது, சிக்கனமாக செலவு படுத்தி சேமிப்பது நன்மைதரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சுமாரான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. அலுவலகத்தில், உடன் பணிபுரிபவர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சொந்தத் தொழிலில், பண பரிமாற்றத்தில் உஷாராக இருப்பது நல்லது. பிரச்சனை என்று வந்தால் கூட, முடிவுகளை உடனே எடுத்துவிட வேண்டாம்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடகராசிக்காரர்களுக்கு இன்றையதினம் சற்று செலவு அதிகரிக்கச் செய்யும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை இந்த தினத்தில் வாங்குவது நன்மை தரும். வியாபாரத்தில் மாற்றம் செய்வதாக இருந்தால், தாராளமாக செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிகளின் மூலம் கடன் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அனுகூலமான தினமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களது பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே அவ்வபோது சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நினைத்ததை நிறைவேற்றும் தினமாகப் அமையப்போகின்றது. எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டாலும் அது கட்டாயம் வெற்றி அடையும். பண பரிமாற்றத்தில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாளாக பிறக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக சந்திக்காத ஒரு நபரை சந்திப்பதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொறுமையோடு இருக்க வேண்டிய தினம். அவசரப்பட்டு எந்த பிரச்சினைக்கும், அவசரஅவசரமாக முடிவை எடுக்க வேண்டாம். முடிவெடுப்பதைத் தள்ளிப் போடுங்கள். உறவினர்களிடம் கூட வாக்குவாதம் செய்ய வேண்டாம். அமைதியை மட்டும் பதிலாக வைப்பது மிகவும் நல்லது. இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எல்லா விஷயத்தையும், வெற்றிகரமாக முடிக்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. இதுநாள்வரை தடைப்பட்டிருந்த காரியம் கூட, இன்று ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். உங்களுடன் பணிபுரிந்தவர்கள் அலுவலகத்தில் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். இத்தனை நாட்களாக உங்களை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் கூட இன்று சரியாக புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்று, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் செல்வதாக இருந்தால் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் உங்களது வேலையை விட்டு விட்டால், வேறு வேலை கிடைக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். முதலாளிய அனுசரித்து தான் செல்ல வேண்டும். போகப்போக நிலைமை சரியாகிவிடும். திருமண பேச்சுக்களை எடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாள் தான் இன்று. மேலதிகாரிகளிடம் பாராட்டை பெற்றாலும், சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். நீங்கள் பேசும் நல்ல வார்த்தைகள் கூட, தவறான அர்த்தம் ஆகிவிடும். ஆகவே, வார்த்தைகளை நிதானமாக பேச வேண்டும். யாரிடமும் வீணாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.