இன்றைய ராசி பலன் – 4-10-2020

rasi palan - 4-10-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அக்கம்பக்கத்தினர் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக் சங்கடங்கள் நீங்கும். உத்தியோகம் ரீதியான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் துறையில் லாபம் சீராக இருக்கும். குரு பகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் தடைகள் தாமதங்கள் உருவாகலாம். கிரக அமைப்பு சாதகமற்று இருப்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் காணப்படும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் நன்கு ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. சனிப் பிரீதி செய்வது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நினைத்த காரியம் ஒன்று நிறைவேறக்கூடிய தருணம் இது. பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் தரும் தொல்லைகள் வெறுப்பை உண்டாக்கும். புத பகவானை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமைப்பு என்பதால் எந்த கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். விக்னங்களை தீர்க்க விநாயகரை வழிபடுங்கள்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தில் இதுவரை இருந்துவந்த உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் காலத்தைப் பற்றிய பயம் மேலோங்கி காணப்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான பலன்கள் கிடைக்க கூடிய அமைப்பாக உள்ளன. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் மீண்டும் வந்து ஒன்று இணைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் லாபம் பெருகும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் சோர்வுடன் காணப்படுவார்கள். இதுவரை இருந்து வந்த பொருள் கொண்டால் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சிக்கும் குறைவு இருக்காது. குடும்ப நபர்கள் ஒற்றுமையுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன் உண்டு. கடன் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைய கால பைரவரை வணங்கி வாருங்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவு குடும்பத்தில் இருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும். வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். சுயதொழிலில் சரியான லாபம் கிடைக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனமகிழ்ச்சி அதிகரிக்கக் கூடிய நாளாக இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் நினைத்தது நடக்கும். திருமணம் போன்ற தடைப்பட்ட சுப காரியங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நினைத்தது ஒன்று நடந்தது அதைவிட சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட பல மடங்கு லாபம் தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவியுடன் புதிய விஷயங்களை கற்று வருவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் எச்சரிக்கை தேவை.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் எதிலும் லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான அவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி பெரிய லாபம் காண்பீர்கள். சுயதொழில் புரிபவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். உங்களின் விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி மகிழ்ச்சியை அளிக்கும். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். கணவன்-மனைவி இடையே இருந்த அன்னியோன்னியம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் காணலாம். அம்பிகையை வழிபட நன்மைகள் நடக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.