இன்றைய ராசி பலன் – 4-3-2021

rasi palan - 4-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் தனவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப்பெறும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டது துலங்கும் கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நண்பர்களை சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும்.’

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புத்துணர்வு பிறக்கும் நல்ல நாளாக இருக்கும். புதிய சொத்துக்கள் மூலம் வரக்கூடிய அனுகூலமான பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பம் நீங்கி நடிகை எடுக்கக்கூடிய தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் முன் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் முயற்சிகள் பலன் தரக்கூடிய வகையில் சில விஷயங்கள் நடக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதமான பலன்கள் உண்டாகும். சுபகாரியத் தடைகள் விலகும் யோகமுண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாளர்களால் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் சமூகத்தின் மீதான அக்கறை உங்களுக்கு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்து அதிக லாபத்தை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் குறையும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் விடா முயற்சி செய்து தான் நல்ல பலன்களைக் காணமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சோர்வுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் வளர்ச்சிக்கான பாதையை காட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கேட்கும் வரம் எல்லாம் கிடைக்கக் கூடிய இனிய நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணமுடிக்கும் யோகமுண்டு. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த சிலருடைய சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் கையாள்வதும் நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது வீண் பிரச்சனைகளை குறைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வெளியிடங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இருப்பவர்களுடன் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் சில விஷயங்கள் எதிர்மறையாக முடியக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய திறமையால் பலரின் பாராட்டை பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -