இன்றைய ராசி பலன் – 4-7-2020

rasi palan - 4-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக அமையும். தொழில் புரிவோருக்கு லாபகரமான நாளாக அமையும். தங்களின் தொழில் ரகசியத்தை பிறரிடம் கூறாமல் இருப்பது நல்ல பலனைத் தரும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல அந்நியோன்யம் பிறக்கும். நவக்கிரக வழிபாடு நிலையான சந்தோசத்திற்கு வழி வகுக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டம் நிறைந்த நாளாக அமையும். எழுத்தில் முடிய வேண்டிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. சித்தி புத்தி விநாயகனே வழிபட்டு வர மனநிம்மதி அடைவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். சொத்துப் பிரச்சனைகள் சாதகமாக முடியும் நாள். தந்தை வழியே ஆதாயம் காண்பீர்கள். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. பெருமாளை வணங்கி வர கவலைகள் அகலும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக காணப்படும். புதிய முயற்சிகளை எடுப்பதை தவிர்க்கவும். அரசாங்கத் துறையில் பணிபுரிபவர்கள் தங்களின் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. வேலைகளில் பளு அதிகமாக உண்டாகும். அம்மனை வழிபட்டு வர சுபம் உண்டாகும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். கணபதியை வழிபட்டு வர சங்கடங்கள் அகலும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த பிரச்சனைகள் விலகும். பழைய உறவினர்கள் திரும்பி வந்து பேசுவார்கள். வாகன ஓட்டிகள் பயணத்தின் போது கவனம் தேவை. சூரியன் வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பெற்றோர்கள் வழியே ஆதாயம் காண்பீர்கள். உடல் உபாதைகள் அவ்வபோது வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெருமாளை வணங்கி வர குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள். உறவினர்களின் வருகையால் பணச் செலவுகள் ஏற்படும். சிறுசிறு தடைகள் அவ்வப்போது ஏற்பட வாய்ப்புண்டு. புதிய முதலீடுகளை செய்ய வெற்றி காண்பீர்கள். பராசக்தியை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் ஆதாயம் உண்டு. தொழில் புரிவோருக்கு ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். வீடு மனை வாங்க சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த சஞ்சலங்கள் விலகும். பூதேவி அம்மனை வணங்கி வர நல்ல பலனைப் பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். நினைத்ததை முடிக்க கூடிய நல்ல நாளாக அமையும். தடைப்பட்டிருந்த காரியத்தை முடித்து வெற்றி காண்பீர்கள். கூட்டாளிகளிடம் கவனம் தேவை. பண பரிவர்த்தனையும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஹயக்ரீவர் வழிபாடு குடும்பத்தில் சிறப்பு உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய காரியங்கள் வெற்றியில் முடியும். தடங்கல் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையோடு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். திடீர் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருட பகவானே வணங்கி வர தடைகள் நீங்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலத்தை உரத்தை தரக்கூடிய நாளாக அமையும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. புது நட்புக்கள் உருவாகும் சூழல் ஏற்படும். மாணவர்கள் தங்கள் திறமையினால் வெற்றி காண்பார்கள். முருகப்பெருமானை வழிபட்டு வர உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -