இன்றைய ராசிபலன் – 5 அக்டோபர் 2023

daily-rasi-palan5
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த சண்டைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி சண்டை சச்சரவு ஒரு முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்திலிருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட சரியாகிவிடும். சொந்த தொழிலில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பெருசாக நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய பேச்சு இன்று அடுத்தவர்களை கவரும்படி அமையும். சாதிக்க முடியாத நிறைய விஷயங்களை சுலபமாக என்று சாதித்துக் கொள்ளலாம். குறிப்பாக வழக்கறிஞர்கள் ஆசிரியர்களுக்கு இன்றைய நாள் பாராட்டையும் புகழையும் தேடி தரும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பொது சேவையில் அக்கறை காட்டுவீர்கள். இதனால் நிறைய பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத வரவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தொந்தரவுகள் நிறைய இருக்கும். இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா என்ற அளவுக்கு உங்கள் பக்கத்தில் நாலு பேர், உங்களை வேலை செய்ய விடாமல் நச நசவென்று என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். தலைவலி கூட வரும். என்ன செய்வது சில நேரங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிக் கொள்வது சகஜம் தானே. மற்றபடி இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நிம்மதி எல்லாம் சகல சௌகரியங்களும் தேடிவரும். சுகபோகமான வாழ்வு தான் இன்று எந்த அலைச்சலும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து விடுவீர்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். சேமிப்பை தொடங்குவதற்கு உண்டான முயற்சிகளில் மேற்கொள்வீர்கள். வங்கி கணக்கு புதுசாக தொடங்குவது அல்லது சீட்டு போடுவது இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை இன்று செய்யலாம். அது உங்களுக்கு லாபத்தை எதிர்காலத்தில் கொடுக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். அவசர அவசரமாக எந்த முடிவு எடுக்காதீங்க. முன்கோபம் வேண்டாம். உறவுகளை அனுசரிக்கவும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சொந்தத் தொழிலில் யாரையும் எதிரியாக மாற்றாதிங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதி பற்றாக்குறை ஏற்படும். சில பேர் சம்பளம் வராமல் தவித்து வருவார்கள். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். பணத்தின் அருமை பெருமைகளை இன்று தெரிந்து கொள்வீர்கள். சேமிப்பு செய்வது எவ்வளவு நல்லது என்பதற்கான பாடத்தை இந்த நாள் உங்களுக்கு கற்றுக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. செலவை குறைக்கவும். சேமிப்பை அதிகப்படுத்தவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் நல்லதாகவே நடந்தாலும் இறுதியில் சின்ன சின்ன தோல்விகள் உங்களை சோர்வடைய செய்யும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நல்லது நடக்கவில்லையே என்ற சோகம் மனதில் இருக்கும். கவலைப்படாதீங்க. விடாமுயற்சி தான் விஸ்வரூபம் வெற்றியை கொடுக்கும். தோல்விகள் தான் வெற்றிக்கு உண்டான முதல் படி. ஆகவே இன்று சோர்ந்து போகாதீங்க. உங்களுடைய வேலைகளை எப்படியும் முடித்தே ஆக வேண்டும் என்று உறுதியோடு இருந்தால் வெற்றி நிச்சயம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பூஸ்டர் பேக் போட்டது போல சுறுசுறுப்பு இரட்டிப்பாக இருக்கும். எல்லா வேலைகளையும் பம்பரம் போல சுழன்று செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உற்சாகமான நாள் இது. எல்லா விஷயத்திலும் உங்களுக்கு இரண்டு மடங்கு வெற்றி கிடைக்கும் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் சுபிட்சமாக முடியும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பெண் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தாய்மாமன் வீட்டு உறவு உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கலாம். இறைவனின் பரிபூரண ஆசிர்வாதத்தை பெற குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வாருங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன தேவை, என்பதை கேட்டு அந்த தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. கணவன் மனைவி வாழ்க்கையில் விரிசல் விட வாய்ப்புகள் உள்ளது. எல்லா சூழ்நிலையிலும் ஒரே மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொண்டால் தான் வெற்றி பெற முடியும்.

- Advertisement -