இன்றைய ராசிபலன் – 6 அக்டோபர் 2023

daily-rasi-palan6
- Advertisement -

மேஷம்

உங்கள் குறைபாடுகளை இன்று நீங்களே சரி செய்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபப்படக்கூடாது. சிரித்த மலர்ந்த முகத்தோடு வேலை செய்வது நல்லது. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களையும் அடிமைத்தனத்தோடு நடத்த வேண்டாம். சக நண்பர்களாக பாவித்து எல்லோரும் மனிதர்கள் தான் என்ற மனநிலையில் நடந்து கொண்டால் பிரச்சனைகள் கிடையாது. உங்களுடைய மேலாதிக்கம், முதலாளித்துவம் அதிகமானால் இன்று சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் ஜாக்கிரதை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியை தரக்கூடிய நாளாக அமையும். பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. அந்தந்த வேலை அப்படியே நடக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பணவரவால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று உறவுகளுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த உறவுகள் கூட உங்கள் பிரச்சனைகளுக்கு கைகொடுக்கும். நிறைய நல்ல விஷயங்களை உங்களுடைய மனது புரிந்து கொள்ளும். இத்தனை நாள் செய்த தவறுக்கு எண்ணி வருத்தப்பட வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் எல்லாம் தீர போகும் நாள் இன்றைய நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவு நிறைந்த நாளாக இருக்கும். கையில் சேமித்து வைத்திருந்த இருப்பு சில தேவைகளுக்காக செலவாகும். கவலைப்படாதீங்க. பெண்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பிறந்த வீட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். எதிர்பாராத வரவு மகிழ்ச்சியை கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் குடும்பத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபரிடம் உங்கள் குடும்பப் பிரச்சனையை பகிர வேண்டாம். பிள்ளைகளோடு வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிரச்சினையை பெருசாக்காதீங்க. சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அவசர தேவைக்கு உதவி கிடைக்காமல் சின்னதாக திண்டாட்டம் ஏற்படும். யாரும் உதவிக்காக வர மாட்டாங்க. யாரு கிட்ட போய் உதவி என்று நின்றாலும் அவர்கள் கையை விரித்து விடுவார்கள். கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகிவிடும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட்டால் பிரச்சனை இல்லை.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக தான் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் சொந்த பந்தங்களுக்கு இடையே சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களோடு சொத்து பிரச்சனை வரலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பாராட்டும் புகழும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். எந்த வேலையிலும் மனசு ஈடுபடாது. குழப்பங்களுக்கு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சின்ன சின்ன தடுமாற்றம் இருக்கும். முக்கியமான முடிவை அடுத்த நாள் தள்ளி போடுங்கள். இன்று உங்களுடைய அன்றாட வேலையை மட்டும் கவனத்தோடு செய்தால் போதும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு கலைத்துறையினர்களுக்கு இன்று இனிய நாளாக அமையும். சொந்த தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து வேலை செய்யுங்கள். அதிக முதலீடு செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முன்கூட்டியே வீட்டிலிருந்து கிளம்பி விடுங்கள். இன்ற வேலைகளில் சின்ன சின்ன தடைகள் வர வாய்ப்பு உள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சின்ன சின்ன ரத்த காயம் படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் சமைக்கும் பெண்கள் முதல், வண்டி ஓட்டிக் கொண்டு செல்லும் ஆண்கள் பெண்கள் வரை ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை இல்லை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த எதிர்பாராத பொறுப்புகள் வந்து தலை மேல் உட்கார்ந்து கொள்ளும். ஆபீஸில் ஓவர் டைம் செய்ய வேண்டிய வேலை இருக்கும். சொந்தத் தொழிலில் நிறைய சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை பளு அதிகமாக இருக்கும். இதனால் தலைபாரம் மன அழுத்தம் ஏற்படும். கொஞ்சம் ரிலாக்ஸாக யோசித்து சிந்தித்து செயல்பட்டால் பிரச்சினையில் இருந்து, சிக்கல் இருந்து வெளிவரலாம். முன்கோபம் கூடாது. அவசரம் கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக அமையும். அதிகாலை வேளையிலேயே எழுந்து உங்களுடைய வேலையை செய்ய தொடங்கி விடுவீர்கள். காலில் பம்பரம் கட்டி சுற்ற வேண்டிய சூழ்நிலை. உபயோகமான வேலைகள் தான் செய்வீங்க. அதில் சக்ஸஸும் கிடைக்கும். காதல் திருமணம் போன்ற விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அவசரப்பட்டு முக்கியமான முடிவை எடுக்க வேண்டாம்.

- Advertisement -