இன்றைய ராசி பலன் – 6-3-2021

rasi palan - 6-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் செழிப்பாக வளரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்லும் சூழ்நிலை இருக்கும். வீட்டில் குடும்ப அமைதி நிலையாக இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்மறையாக நடக்கக் கூடும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த பணப் பிரச்சினை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி வாய்ப்புகள் உண்டாக கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்து நடக்கும் யோகம் உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எதிர்பார்க்கும் வகையில் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவழிபாடுகள் மூலம் எதிர்பார்த்த மன அமைதியை பெற்றுக்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவன குறைவுடன் செயல்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி உண்டாகும். புதிய முதலீடுகள் செய்து நல்லதொரு முன்னேற்றத்தை காணலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கி பங்குதாரர்களுடன் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர், தொழில் சம்பந்தமான பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். பெண்கள் இறை வழிபாடுகள் மூலம் புத்துணர்வு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சமுதாயத்தின் மீது அக்கறை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி கிடைக்க கூடிய வகையில் அமைப்புகள் இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் மற்றும் வியாபாரம் துவங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -