இன்றைய ராசி பலன் – 7-08-2020

rasi palan - 7-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கி முன்னேற்றம் பெருகும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக காணப்படும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபகரமான பலன்கள் உண்டு. உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு தன்னம்பிக்கை உண்டாகும். தொழில்சார் நிறுவனங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது சற்று தள்ளி வைப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை அவ்வளவு நல்லதல்ல. வேலை வாய்ப்பு ஒரு சிலருக்கு நினைத்தபடி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியில் திக்குமுக்காட கூடிய நாளாகும். சுபச் செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் இல்லத்தில் புதிய வரவு ஒன்று நிகழ இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமான சூழ்நிலை நிலவும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சிம்மம

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கூடுதல் கவனம் எடுப்பது நல்லது. வெளியில் செல்லும்பொழுது உடைமைகள் மீது கவனம் தேவை. திடீர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. பிள்ளைகளால் உள்ளம் மகிழும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிந்திக்கக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குழப்பங்கள் உருவாகக்கூடும். உடல் உபாதைகள் ஒரு சிலருக்கு தொந்தரவுகளை தரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் காண்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதாரம் சீராய் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் வந்துசேரும். வாகன வகையில் ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருப்பதன் மூலம் பொருளாதாரத்தை சரி செய்ய முடியும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனமகிழும் செய்திகள் வந்து சேரும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல விருத்தியையும் புதிய வாய்ப்புகளையும் பெறக்கூடிய அமைப்பு உள்ளது. திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இல்லத்தில் மங்கல காரியங்கள் நடை பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.தொழில்துறை மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் ஈட்டக்கூடிய அமைப்பாக இருக்கிறது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமைய இருக்கிறது. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டு. கலைத்துறை மற்றும் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வெளி நபர்களிடமும் குடும்ப நபர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -