இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2023

daily-rasi-palan7
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. யாரிடத்திலும் வாங்குவாதம் செய்யக்கூடாது. பொறுத்து போனால் பூமி ஆளலாம் என்று சொல்லுவார்கள். அப்படி நீங்கள் இன்று கொஞ்சம் பொறுத்துப் போக வேண்டிய காலம். ஆரோக்கிய சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் திட்டமிட்டது போலவே தானாக சரியாக நடக்கும். நீங்கள் நினைக்காத நல்லது கூட உஙக்ளை தேடி வரும். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தையல் தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பாக செல்லும். வேலை செய்யும் இடத்தில் வேலை வலு அதிகமாக இருக்கும். சிரமம் பார்க்காமல் கஷ்டப்பட்டு வேலையை எல்லாம் முடித்து விடுங்கள். இந்த நாளின் இறுதியில் நல்ல செய்தி செவிகளை வந்து எட்டும். செய்த வேலைக்கு உண்டான பாராட்டுகளையும் பெறுவீர்கள். மனநிறைவான சந்தோஷமான நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையும் கவலை படாதீங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கத்தான் செய்யும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடு இருக்காது. இருந்தாலும் அன்றாட அத்தியாவசியமான வேலைகள் செய்துதானே ஆக வேண்டும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனையை வாழ்க்கைத் துணை புரிந்து கொண்டு அதற்கு உண்டான உதவியும் செய்வாங்க கவலைப்படாதீங்க.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கூடுதல் உற்சாகம் இருக்கும். வழக்கத்தை விட சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். பம்பரம் போல காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவீர்கள். பார்ப்பவர்கள் உங்களை கோமாளியாக பார்க்கலாம். ஆனால் உங்களுக்குள் இருக்கும் உத்வேகம் உங்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும். நல்ல முன்னேற்றம் தரும் நாள் இது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும், அதனால் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. நல்ல அனுபவத்தை பெறுவீர்கள். இந்த தவறை அடுத்த முறை செய்யக்கூடாது என்று தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட தேவையான அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் வேண்டாத விவாதங்களை பக்கத்து வீட்டு பெண்களிடம் செய்யக்கூடாது. அதில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை செய்து களைப்பு அதிகமாக உண்டாகும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கடைசி நேரத்தில் நல்லது கைநழுவி போக வாய்ப்புகள் உள்ளது. அதனால் இடிந்து போகக்கூடாது. மனதை தேற்றி கொள்ளவும். இறைவன் நமக்கு இன்று எதை கொடுத்திருக்கின்றானோ அது நமக்கு நிச்சயம் கிடைக்கும். நமக்கு இல்லை என்பது நம் கைக்கு கிடைக்காது. இன்று இந்த எதார்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டால் நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கையும் உறுதியும் அதிகமாக இருக்கும். தைரியத்தோடு செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் பணக்காரர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டீங்க. யாராவது உங்களிடம் வந்து ஏடாகூடமாக பேசினால் பதில் கொடுத்து அனுப்புவீர்கள். எதிரிகளுக்கு இன்று, உங்களால் மூக்கு உடைய வாய்ப்புகள் உள்ளது. போட்டிகளில் ஜெயிக்க கூடிய நாள் இது. என்ஜாய் பண்ணுங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஓயாமல் வேலை இருக்கும். காலையில் எழுந்து மாலை வரை உட்கார கூட நேரம் இருக்காது. இரவு நல்ல தூக்கம் இருக்கும். வேலை செய்த திருப்தியும் இருக்கும். சந்தோஷமான இந்த நாளில் உங்களுடைய மனைவியின் கையால் ஒரு பரிசு வாங்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வீட்டு முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டில் ஏதாவது விசேஷம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. சொந்த பந்தங்கள் ஒன்று கூடி ஒன்றாக சாப்பிட்டு நேரத்தை கழிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். மனநிறைவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுங்கள். டார்கெட் ஏதாவது இருந்தால் அதை அச்சவ் செய்ய பாருங்க. அப்போதுதான் வேலையில் பிரச்சனை வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -